பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
377
மும், கலித்தொகையும், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரமும் பாண்டிய நாட்டின் தெற்கே பரவியிருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிப் போனதைப்பற்றிக் கூறுகின்றன. 5இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இச் செய்தியை வலியுறுத்துகிறது.6 அக் காலத்திலும் குமரித்துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் குமரித் துறையில் இருந்து இலங்கைப் பக்கமாக கடலில் இடையிடையே பாறைக்கற்கள் காணப்பெற்றதை மணிமேகலை கூறுகிறது.7 இந்திய நாட்டு மக்கள் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பிறகு குமரித் துறையிலும் நீராடினர். பாண்டிய நாட்டிற்குத் தெற்கே இலங்கை வரையில் இருந்து பின்னர் மூழ்கிப்போன நிலம் ‘லெமூரியா’ என்றும். 'குமரிக்கண்டம்' என்றும் கூறப்படுகிற பழங்காலப் பெரிய நிலப்பரப்பு அன்று. இப்பொழுது இந்தியப் பெருங்கடல் என்று கூறப்பெறுகிற பெரிய நிலப்பரப்பு மிகப்பழைய காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டம் முதல் ஆஸ்திரேலியா வரையில் பரந்த பெரிய நிலமாக இருந்தது என்றும், அதற்கு 'லெமூரியா' என்னும் பெயர் வழங்கியதென்றும், பின்னர் அக்கண்டம் மறைந்துபோய் இந்தியப் பெருங்கடல் தோன்றியதென்றும் நிலப் பொதியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழங்காலத்தில் இருந்த லெமூரியாக் கண்டம் வேறு; சங்க காலத்தில் கன்னியாகுமரிக்கு அருகிலே இருந்து மறைந்து போன நிலப்பரப்பு வேறு. இவை இரண்டையும் ஒன்றாகக் கூறுவது கூடாது.8
மேற்கு எல்லைப் பகுதி
சங்க காலத்துப் பாண்டிய நாடு மேற்குக் கரைப்பக்கத்தில் இப்போதைய தென்திருவாங்கூர் வரையில் பரவி இருந்தது. பொதிகை மலை நாடும், நாஞ்சில் நாடும் தென்திருவாங்கூர் வரையில் பாண்டிய நாட்டுடன் சேர்ந்திருந்தன. ஆய் என்னும் வேள் அரசர் பொதிகை மலை நாட்டை அரசாண்டார். பாண்டிய அரசர்களைச் சேர்ந்திருந்த ஆய்ச் சிற்றரசர்களின் நாடு, மேற்குக் கடற்கரை வரையில் விரிந்து இருந்தது.
வடக்கு எல்லைப் பகுதி
முதுகோடி (தனுஷ்கோடி) பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.9 தென்வெள்ளாறும் அதன் பகுதியாகிய கொடும்பாளூரும் பாண்டிய நாட்டின் வடஎல்லைகளாகும். கொடும் பாளூரையாண்ட குறுநில மன்னர்கள் இருங்கோவேள் என்பவராவர்.10 திண்டுக்கல் பாறையும்,