உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

381


யாகவும் திகழ்ந்தது. யவனர்கள் ‘கொல்கொய்’ என்று வழங்கிய துறைமுகம் கொற்கையேயாகும்.22 கடல் கொண்ட கவாடபுரம் கொற்கையாக இருக்கலாம் எனச் சில அறிஞர்கள் கருதுவர். பாண்டிய நாட்டின் தென் கோடியில், கன்னியாகுமரிக்கருகில் குமரித்துறைமுகம் இருந்தது. இது துறைமுகமாகவும் புனித நீராடும் இடமாகவும் கருதப்பெறுகிறது. தமிழ் நாட்டவரும், மற்றையோரும் இங்குப் புனித நீராடுவதுண்டு. குமரித் துறைமுகத்திற்கருகில் குமரி என்னும் ஊரும், அங்கு ஒரு கப்பல் அமைக்கும் தொழிற்சாலையும் இருந்ததென்று யவனர்களுடைய குறிப்புகளிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டின் மேற்குக் கடற்கடற்கரையில் ஆய் நாட்டில் விழிஞம் என்னும் துறைமுகப்பட்டினம் இருந்தது. ஆய் நாட்டுக் குறுநிலமன்னர்கள் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் ஆவர். ஆய் நாட்டில் (எலங்கோன்) என்னும் துறைமுகம் இருந்ததென்று தாலமி என்னும் ஆசிரியர் கூறியுள்ளது விழிஞம் துறைமுகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.23

முற்காலப் பாண்டிய நாட்டு நகரங்கள்

கடல்கொண்ட மதுரை

கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த நிலப்பரப்பில் ஆதி மதுரை இருந்து பின்னர்க் கடலில் மூழ்கியது.24 இக்கடல்கோளுக்குப் பிறகு கவாடபுரம் பாண்டியர்களுடைய தலைநகராயிற்று.25 இக் கவாடபுரத்தில்தான் இடைச்சங்கம் இருந்ததெனச் செவிவழிச் செய்தி கூறுகிறது. இரண்டாவது கடல்கோளில் இக்கவாடபுரம் அழிந்து போயிெற்று. கவாடபுரத்தில் முடத்திருமாறன் என்ற பாண்டிய அரசன் இருந்ததாகவும், அவ்வரசவையை யாற்றங்கரையில் மதுரை நகரத்தை அமைத்து அதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் எனவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.26

கூடல் நகர்

கவாடபுரம் கடலில் மூழ்கியபிறகு கூடல் நகரம் பாண்டிய நாட்டின் தலைநகரமாயிற்று. இந் நகரம் தாமரை மலர்போல் வட்ட வடிவமாக அமைக்கப்பெற்றதென்றும், அம் மலரின் நடுவிலுள்ள பொகுட்டுப்போலப் பாண்டியனுடைய அரண்மனை இருந்ததாகவும், அரண்மனையைச் சூழ்ந்திருந்த தெருக்கள் தாமரை மலரின் இதழ்களைப் போலவும், அந் நகரத்தில் வாழ்ந்த மக்கள் மலரில் இருந்த