பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
387
மாதேவியும் கோவலன் கொலைக்கு ஒருவகையில் காரணமாகயைால் கணவனுடன் தானும் மாண்டு செங்கோலை நிலை நாட்டுகிறாள்.
ஆரியப்படையை வென்றது
தமிழ்நாட்டுத் தெற்கிலிருந்த நிலப்பகுதியைக் கடல் கொண்டமையால் தமிழர், தம் நாட்டுப் பரப்பை வடக்கில் விரிவாக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆரியரும், தெற்கில் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர். இந்தப் போட்டியில் நிகழ்ந்த போர்களில் நெடுஞ்செழியன் ஆரியப் படைகளை வென்றிருத்தல் வேண்டும். ஆகையால், இவனுக்கு ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்னும் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இங்குச் சுட்டப்படும் ‘ஆரியர், தொடக்க காலப்பல்லவராக இருத்தல் கூடும்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அப்போரில் ஏழு அரசர்களை வென்றவன் ஆவான், வென்வேற் செழியன் என்றும் ஒரு பாடலில் குறிப்பிடப்படுகிறான்.38 இப் பாடல் பாண்டியன் நெடுஞ்செழியன்மீது பாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.39 எனவே, ‘வென்வேற் செழியன்’பாண்டியன் நெடுஞ் செழியன்’ ஆகிய பெயர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டுகின்றன. இப் போரில் ஏழு பேரை வென்ற அரசனைப் ‘பசும்பூட் செழியன்’ என்று குறிப்பிடப்படும் அரசனும் இவனே எனத் தெரிகிறது.40 வென்வேற் செழியன் என்னும் பெயர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையில் அரியணை ஏறிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரை நினைவுபடுத்துகிறது.41 இவன் தொடக்கத்தில் கொற்கை கோமான் என்றும், மதுரையை ஆண்ட அரசன் என்றும் குறிப்பிடப்படுகிறான்.42 கொற்கையில் ஆட்சியைத் தொடங்கிய இவன் ‘கடுந்தேர்ச்செழியன்’ என்றும், ‘தென்புலங் காவலர் மருமான்’ என்றும் குறிப்பிடப் படுகிறான். மற்றொரு பாடல் ‘இயல்தேர்ச் செழியன்’, ‘நெடுந்தேர்த் தென்னவர் கோமான்’ எனவும் குறிப்பிடுகிறது.43 தேர் அடைமொழியும், தென்னர் குடித் தலைமையும் சேர்ந்து மேலே கண்ட கருத்துகளை உறுதிப்படுத்துகின்றன. மற்றும் ‘கொடித்தேர்’ என்னும் அடைமொழியாலும் சிறப்பிக்கப்படுகிறான். 44 அடுபோர், வெம்போர், மறப்போர், நெடுந்தேர், கடுந்தேர், இயல்தேர், கொடித்தேர், திண்டேர் முதலிய சொற்கள்