உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கொடுத்த செய்தியைக் கேள்விப்பட்டு (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) அவனைத் தானும் நேரில் கண்டு பரிசில் பெற்றுத் திரும்பினான்; வழியில் தங்கால் என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் தங்கி இளைப்பாறினான். அப்போது பார்ப்பனச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பராசரன் தன்னோடு வழுவின்றி வேதம் ஓதுபவர்க்கு ஒரு பரிசு நல்குவதாகக் கூறினான். அவ்வூரில் வாழ்ந்த வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் வழுவின்றி வேதம் ஓதக் கேட்டுத் தன்னுடைய முத்துப் பூணூலை அச் சிறுவனுக்கு அளித்தான். ஏழை வார்த்திகன் மகனின் மார்பில் விலையுயர்ந்த முத்துப் பூணூலைக் கண்ட அரசு காவலர் அரண்மனையில்திருடிய குற்றம் சாட்டி வார்த்திகனைச் சிறையிலிட்டனர்.

வார்த்திகனின் மனைவி கார்த்திகை தன் மகனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமையை ஐயை கோயிலில் முறையிட்டு அழுதாள். ஐயைத் தெய்வம் தன் கோயிற் கதவுகளை அடைத்துக் கொண்டது. தன்னாட்சியில் கொடுங்கோன்மை நிகழ்ந்துள்தோ என வினவிப் பாண்டியன் ஆராய்ந்தபோது, காவலர் வார்த்திகனுக்கு உண்டாக்கிய துனபத்தைக் கூறினர். மன்னன் வார்த்திகனை வருவித்து அவனிடம் மன்னிப்பு வேண்டினான். ஐயை கோயில்கதவு திறந்து கொண்டது. இங்குக் குறிப்பிடப்படும் மன்னனுடைய பெயரும் ஆரியப்படை கடந்த நெடுட்ஞ்செழியன் என்று கருதத்தக்கது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மதுரைநகர் (அரண்மனை) அழியும் என்ற நிமித்திக வாக்கு மக்களிடையே நிலவி வந்தது.37 அரியணையில் அமர்ந்தபடியே இறந்துபோனமையால் இந்தப் பாண்டியன் அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். வார்த்திகன் நிகழ்ச்சியில், அறியாத மக்களின் சொல்லைக் கேட்டு, இவன் கொடுமை செய்தது போலவே கோவலன் நிகழ்ச்சியிலும் அரண்மனைப் பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு இவன் கோவலனைக் கொன்றுவிடச் செய்கிறான். முனனர்ச் சிறையில் இருந்து விடுதலையால் அப் பிழை பொறுக்கப்பட்டது. இப்பொழுது கொலையுண்ட உயிருக்கு ஈடாகத் தன் உயிரையே கொடுக்கவேண்டிய நிலை நேர்ந்துவிடுகிறது. தன் தவற்றினை உணர்ந்தபோது, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர்துறந்தான். பாண்டி-