உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

457


ஆனால், தமிழரின் தெய்வங்கள் இலங்கையிலும் சிங்களவர்களால் சிறு தெய்வங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்தத் தெய்வ வணக்கம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும்.

அடிக்குறிப்புகள்

1. (P. 156, The Veddas by C.G. Seligmann and Brenda z. Seligmann 1911).

2. வருணனை ஆதி காலத்தில் ஆரியரும் வழிபட்டனர். வடமொழி வேதங்களில் வருணன் வணக்கம் கூறப்படுகிறது. வட இந்தியாவில் வாழ்ந்திருந்த திராவிட சமூகத்தினர் வருணனை வழிபட்டனர். என்றும் அவர்களிடமிருந்து ஆரியர் வருணன் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு வழிபட்டனர் என்றும் ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர். திராவிடராகிய தமிழரும் வருணனை வணங்கினர். இது பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டுவது இல்லை.

3. The Shrine of Upulvan at Devundara, by Dr. S. Paranavitana 1953, Memolrs of the Archaeological Survey of Ceylon. Vol. VI.