52
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
அடிக்குறிப்புகள்
1. ‘இரும்பு புனைந்தியற்றாப் பெரும் பெயர் தோட்டி. அம்மலை காக்கும் அணி நெடுங்குன்றில், பளிங்கு வகுத்தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி’ (புறம்: 150: 25-28) (கோட்டி - யானைப்பாகர் யானைகளை அடக்கி நடத்துகிற ஓர் ஆயுதம். இது இரும்பினால் செய்யப்படுவது. அந்தப் பெயரையுடைய இந்த மலை ‘இரும்பு புனைந்து இயற்றா தோட்டி’ எனப்பட்டது.
2. ‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்’ (குறும் 210: 1-2) (நள்ளி - கண்டிரக்கோ அரசன் பெயர், அண்டர் - ஆயர், இடையர்)
3. “முருகன் நன்பேர் நெடுவேள் ஆவி, அறுகோட்டியானைப் பொதினி” (அகம். 1:3-4) “முழபுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி, பொன்னுடைய நெடுநகர்ப் பொதினி” (அகம். 61: 15-16).
4. “பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம். 208:22) “செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.” (நற். 201:5)
5. “தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன், பன்மணிக் குவையெடும் விரைஇக் கொண்பெனச், சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை, ஓங்கிருங் கொல்லிப் பொருநன்” (புறம், 152: 28–31) “பகல்செலப், பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப், பெருமரங்கொன்ற கால்புகுவியன்புனத்து, எரிமருள் கதிர திருமணியிமைக்கும், வெல்போர்வானவன் கொல்லிக் குடவரை (அகம். 213: 111-5).
6. “கடவுள் எழுதிய பாவை”. (அகம் 62:15) “தெய்வம் எழுதிய வின்மான் பாவை” (நற். 185– 10)
7. “செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித் தெய்வங்காக்கும் தீதுநீர் நெடுங்கோட் அவ்வெள்ளருவிக் குடவரையகத்துக் கால் பொரு திடிப்பினும் கதமுறை கடுகினும், உருமுடன் நெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலங்கிளறினுந் திருநலவுருவின், மாயர் இயற்கைப் பாவை”. (நற்றினை. 201: 5-11).
8. (Ancient karnataka. Vol. I. History of Tuluva. Baskar. Anand Saletore 1936)
9. P. 33. Cera kings of the sangem period K.G. Sesha Aiyar 1937. “சங்க காலச் சிறப்புப் பெயர்கள்” பக்கம் 258, 335. “வேளிர் வரலாறு” பக்கம். 65.