உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடராஜன்:

LO

5

10

15

இரண்டாம் களம்

இடம் : ஊர்ப்புறத்து ஒரு சார். காலம்: வைகறை.

(நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க)

(இணைக்குறள் ஆசிரியப்பா)

(தனிமொழி)

பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம்

ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்

தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து

சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே!

சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து

ஒருமுறை கூவி உழையுளார் புகழ்

பரிதி – பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி – ஓவியம் எழுதுவதற்கு உபயோகப் படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் – பக்கத்தில் உள்ளவர்.