உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

இரவி

-

உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி 20 மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை 25 அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் 30 கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர்.

கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த

35 பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி

உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக்

123

ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே – கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து தாளம் பிடித்து. எஞ்சலில் - குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் - கூட்டம். ததையும் - நெருங்கிய, அடர்ந்த. கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை அங்கும் இங்கும். (உழை - பக்கம்).

போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம்.

-