உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

40

45

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே.

ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! வாணீ! மங்காய்! வாழி நின்குணம்!

ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணீ! அறிவேன்! அறிவேன்! 50 உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து)

-

காணின் நன்றாம். காரிகை யார்கொல்?

(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து.

நற்றாய்:

(ஆசிரியத்துறை)

நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால்

வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. 1

கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு – மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங் கலை-வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உ உகுத்து உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் – கெடும். வம்புரை – வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா.