உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

பலதேவன்: எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க)

தோழன்:

பல:

தோ:

65

பல:

70

நட:

75

செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ?

அறியேன். போ! போ!

இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில்.

வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு.

வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்?

கணிசத் திற்கது; காரியத் திற்கிது.

வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ்

சேவக ராதியர் செய்குவ ரையம்.

எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு?

ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக)

கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும்.

80 இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்?

ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்!

சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது திருமணம். இது கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது.