உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

இரண்டாம் களம்

147

திருநெல்வேலிக் கோட்டைக்கு அப்பால் ஊரின் புறமாகக் காலை வேளையில் நடராஜன் தனியே செல்கிறான். அரண்மனையிலிருந்து சுந்தர முனிவருடைய ஆசிரமத்துக்குச் சுரங்கம் அமைக்கும் வேலையை முடித்துவிட்டான். இன்னும் சிறுபகுதி வேலை ஆசிரமத்தில் செய்ய வேண்டி யிருக்கிறது. நடராஜன் தனக்குத்தானே பேசிக்கொள்கிறான் : "வேலை இன்றிரவு முடிந்துவிடும். வாணியின் முகக்காட்சி என் L மனத்தில் இருந்து இந்த வேலையைச் செய்து முடிக்க என்னை ஊக்கப் படுத்துகிறது. அதனால் அல்லவா இந்த வேலை இவ்வளவு விரைவாக இப்போது முடிந்தது! யாரையும் இயக்குவதற்கு இன்ப முள்ள இலட்சியம் வேண்டும். எல்லோருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும். உலகத்திலே குறிக்கோள் இல்லாதவை எவை ? இதோ முளைத்துள்ள இச் சிறு புல்லுக்கும் குறிக்கோள் உண்டு. இது தன் சிறு பூவை உயரத் தூக்கி அலரச் செய்து அதிலுள்ள தேன்துளியை வந்து உண்ணுமாறு தேனீக்களை அழைத்து அவற்றின்மூலமாக மகரந்தப் பொடிகளைக் கருப்பையில் சேர்ப்பித்துக் காய்காய்க்கிறது. காய்ந்த காய்கள் ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால் அவை நன்றாகத் தழைத்து வளரா. ஆகையால், அக் காய்களைத் தூரத்தில் வெவ்வே றிடங்களுக்கு அனுப்புவதற்காக அவற்றின்மேல் சுணைகளையும் முட்களையும் உண்டாக்கி, அருகில் வருகிற ஆடு மாடு பறவை மனிதர் முதலியவர் களின் மேல் ஒட்டிக்கொள்ளச் செய்து அவற்றின் மூலமாக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வளரச் செய்கிறது. இதன் இயற்கை இயல்பையும் குறிக்கோளையும் காண்போர், எதையும் அற்பமென்று கருதாமல், அவற்றில் உள்ள அன்பையும் அழகையும் குறிக்கோளுக்கு ஏற்ற முயற்சியையும் கண்டு, கண்டு, அவற்றுடன் அன்பினால் கலந்து இன்பம் அடைகிறார்கள்.

66

“இதோ ஓடுகிற வாய்க்காலில்தான் எத்தனை விசித்திரம் உண்டு! கடலை மலையாகவும் மலையைக் கடலாகவும் மாற்றுவதற் கல்லவா இவ் வாய்க்கால் ஓடுகிறது! பரற் கற்களை உருட்டி உராய்ந்து மணலாக்கி வெள்ளத்தில் சேரும் புல் மண்கல் முதலியவைகளையும் அடித்துக் கொண்டு ஓடுகிற ஆறானது, கடல் என்னும் மடுவை அமைக்கிற காலம் என்னும் தச்சனுக்கு உதவியாக அவற்றைக் கொடுத்து, 'ஐயா, சூரியனின் ஆணையினால் நீராகிய நான் ஆவியாகி மேகமாகச் சென்று மலைகள் குன்றுகளின்மேல் மழையாகப் பெய்து அருவியாக