உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ!

வியப்பென்? சுவாமி

175

(இரண்டு உழவர்கள் வர)

அழைத்திடில் யாவர் அணுகார்?

முதலுழவன்:

நட:

வயப்படை வந்தது

அறிவையோ நீயும்?

முதல் உழ:

நட:

வழுதி

2-வது உழ:

நட:

முதல் உழ:

நட:

முதல் உழ:

மணமொழி வழங்க அன்றே விடுத்தான்? மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! செய்ததென்?

ஐய! அதுநாம் அறியோம்.

குடிலன் படிறன்; கொற்றவன் நாடும்

முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான்.

சீச்சீ!

ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய்; புகன்றதார்?

பொய்யல, பொய்யல.

140 ஐய! நா னறைவது கேட்டி: எனது

மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான்

வயப்படை – வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் - மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது - சொல்லுவது. மரித்த - செத்த.