உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

நட:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

(நேரிசை ஆசிரியப்பா. தொடர்ச்சி)

பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும்,

வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும், 110 பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில் உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும் இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில்

115 மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை காட்டிய முகக்குறி யாவும் நன்றல,

வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ! நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத 120 மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப் பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச் செல்லும் அசலத் திரளும் செறிந்து,

நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம். அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை

ஆர்ப்பு - ஆரவாரம். கழல் - வீரக்கழல்; வெற்றிபெற்ற போர்வீரர் இதைக் காலில் அணிவர். வயப்படை வலிமையுள்ள சேனை. ஒளி - பொலிவு. வஞ்சித்தொடை - வஞ்சிப் பூமாலை; மாற்றரசரைத் தாக்குவதற்காகச் செல்லும் வீரர்கள் அணிவது. இது பழைய தமிழரசரின் போர் மரபு. தண்ணுமை பொருவும் - மத்தளம் போன்ற. பொருப்பு மலை. உருமு இடி. ஓதை - ஓசை. 'வெண்கலப் இடி.ஓதை பொருப்பில் உருமு வீழ்ந்தென்ன' என்பது வெண்கல மலைமேல் இடி உருண்டது போல என்னும் பழமொழி. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல என்றுங் கூறுவர்.

துன்னிய - நெருங்கிய. குரத்த - குளம்பினை யுடைய. கொய்யுளை கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர். திரைக்கடற் கூட்டம் - அலை வீசுகின்ற கடல்போன்ற (குதிரைகளின்) கூட்டம்; குதிரைப் படை. பெய்மத மைம்முகில் கூட்டம் – மதநீரைப் பொழியும் கருமேகம் போன்ற (யானைகளின்) கூட்டம்; யானைப் படை. விலோதனம் துகில்கொடி. அசலத்திரள் - மலைகளின் கூட்டம். இங்குத் தேர்ப் படையைக் குறிக்கின்றது.