உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

இருந்தமுனி “வருந்தினவ! ஏதுனது கூச்சம்?

இருவருமே யொருவரெனி லெவர்பெரியர் சிறியர்? திருந்தஅன லருகிலினிச் செறிந்துறைதி மைந்த!

சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே.

என இரங்கி இரண்டுமுறை இயம்பியுந்தன் னருகே யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே மனமிறந்து புறமொதுங்கி மறைந்துவறி திருந்த

187

17

மகன் மலைவு தெளிந்துவெளி வரும் வகைகள் பகர்ந்தான். 18 பகர்ந்தநய மொழிசிறிதும் புகுந்ததிலை செவியில்;

பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத் திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கிச்

சிந்தைநனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான். செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி திகைக்கஎலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை யெனவே விந்தையொடு நடம்புரிந்து வீங்கிருளை வாங்கி மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே.

செ. 17. திருந்த நடுக்கம்.

செம்மையாக. உறைதி

19

20

தங்குவாய். பனிப்பு

சொல்லாமல்.

செ. 18. இயம்பியும் - சொல்லியும். இசையாமல் மலைவு - மயக்கம். பகர்ந்தான் - சொன்னான்.

முகமாகிய

செ. 19. முகமதி ஒருகைப் பதும மலர் மறைப்ப சந்திரனைக் கையாகிய தாமரையினால் மறைத்தான். முனிவருடன் வந்த வாலிபன், உண்மையில் பெண்மகளாகை யினால், தீயின் வெளிச்சத்தில் தன்னைப் பெண் என்று தெரிந்து கொள்ளாதபடி முகத்தைக் கையினால் மறைத்தான் என்பது கருத்து. சுவர் ஓவியம் - சுவரில் எழுதப்பட்ட ஓவியம். பண்டைக் காலத்தில் ஓவியங் களைச் சுவர்களிலே எழுதினார்கள். கருதிடுவான் - எண்ணுவான். செ. 20. இரவு வேளையில், தீச்சுடர் அடங்குவதும் பொங்கி எரிவதுமாக இருந்த காட்சி, எலியைப் பிடித்த பூனை அதனைக் கொன்று தின்பதற்கு முன்னர். அவ்வெலியை ஓடவிட்டுப் பிடித்து விளையாடுவதுபோல இருந்தது என்பது இச் செய்யுளின் கருத்து.