உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய

முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும்:

'எழிலாரு மிளமையினில் இடையூறா திகளால்

இல்லமகன் றிவ்வுருவ மெடுத்திவண்வந் தனையோ? 21

ஏதுனது கவலை? உளத் திருப்பதெனக் கோ தாய்.

இழந்தனையோ அரும்பொருளை? இகழ்ந்தனரோ நண்பர் காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க்

கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய். 22

ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும்

அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய்.

கையாரும் பொருளென்னக் கருதிமணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே.

23

நண்பருற வினர்கள்நமை நாடியுற வாடல்

நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென எண்ணாய்!

பெண்களாகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே! பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம்!

24

செ. 21. வதிந்த குறி முகத்தில் காணப்பட்ட குறி. எழிலாரும் இளமை – அழகு பொருந்திய இளமைப் பருவம். இடையூறாதி - துன்பம் முதலியவை. இவண் - இங்கே.

செ. 22. ஓதாய் - சொல்லுவாய். கழன்றனளோ - நீங்கினாளோ. மெய் விடுத்து - உண்மையை வெளியே விட்டு. கழறாய் - சொல்லுவாய். செ. 23. வையகம் - உலகம். கையாரும் - கையில் வரும். இலவு - இலவ மரம். இலவங்காய் பழுக்காது. முற்றிய பிறகு வெடிக்கும். பழுத்தால் உண்ணலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் கிளி ஏமாற்றம் அடையும். ஆகவே ‘இலவுகாத்த கிளி போல' என்னும் பழமொழி வழங்குகிறது. இச் செய்யுளின் முதல் இரண்டடிகளின் கருத்து, தீ எரியும்போது அந்த வெளிச்சத்தில் பொருள்களின் நிழல் காணப்பட்டு அது தணியும்போது நிழலும் மறைந்துவிடுவதுபோல உலக சுகங்கள் நிலைத்திரா என்பது.

செ. 24. “நெயுறு குடத்தெறும்பு நண்ணல்” - நெய்க் குடத்தை எறும்பு மொய்ப்பது போல என்னும் பழமொழி.