உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

இவ்விதந்தன் மெய்விளங்க இருத்தமக ளெழுந்தே

யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும்: "தெய்வமொடு நீவசிக்குந் திருக்கோயில் புகுந்த

தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே! 29

மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ

வணிக்குல திலகமென வாழ்வளொரு மங்கை.

எண்ணரிய குணமுடையள். இவள் வயிற்றி லுதித்தோர்

இருமகளி ரொருபுருட ரென்ன அவர் மூவர்.

30

ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார்.

ஒருத்திமகள் யான்பாவி; ஒருத்திமுழு மலடி.

செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்;

செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர்.

31

உடல்பிரியா நிழல்போல ஓதிப் புதல்வர்

உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன்.

அடல்பெரியர் அருளுருவர் அலகில்வடி வுடையர்,

அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்?”

உரைத்தமொழி கேட்டிருடி யுடல்புளக மூடி

ஊறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க

எரிக்கவிற கெடுப்பவன்போ லெழுந்துநடந் திருந்தான்.

32

இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள்முன் தொடுத்தே. 33

செ. 29. செமித்தருள்வை - பொறுத்தருள்க.

செ. 30. காவிரிப்பூ மாநகர் - காவிரிப்பூம்பட்டினம். உதித்தோர் பிறந்தவர்.

செ. 31. மலடி

வந்தி, பிள்ளைப்பேறு இல்லாதவள். செப்பரிய - சொல்லுவதற்கு அருமையான. செகம் - உலகம்.

செ. 32. அடல் - வலிமை. அருளுவர் அன்பே உருவமானவர். அலகுஇல் - அளவில்லாத. அறைவனோ -சொல்லுவேனோ.

செ. 33. புளகம் மூடி - மயிர்க்கூச்செறிந்து. வதனம் முகம். இளம்பிடி – இளைய பெண்யானை போன்ற பெண்.