உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

3-ம் படை:

முதற் படை

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

போ! போ!.

40

பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ அறிகுவை.

யாரா யினுமென்?

45

50

பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம்

கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம் மாதா இவ்வயின் மகாநா டிதுவே.

ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் நம்மையும் இகழ்ந்திவ் நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம் தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத் துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும் 55 சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப்

பலவாம் தமது பழம்பழி மீட்போர்

கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம்.

(நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர)

2-ம் படை: பாரும்! பாரும்! நாரா யணரிதோ...

நாராயணன்:

உன்பெயர் முருக னன்றோ?

முதற் படை:

அடியேன்.

குரோதம் - கோபம், பகை. இவ்வயின் - இவ்விடத்தில். உவப்போடு மகிழ்ச்சியோடு. இழுக்கு - குற்றம். உன்னுதி – நினைப்பாயாக. சுதேச அநுராகம் - தன் நாட்டின்மேல் அன்பு.