உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

முரு:

சேவ:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும்.

(வாயிற்சேவகன் வர)

150 சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில்.

மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; 155 விடுத்திட அருளாய்!

விடுகிலம்

ஆயின்,

ஜீவ:

அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம்.

அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில்.

(ஜீவகன் போக)

குடி:

(தன் சேவகனை நோக்கி)

சடையா! கொடுபோய் அடையாய் சிறையில்

(சடையன் அருகே செல்ல)

முரு:

அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம்.

(சடையன் பின்னும் நெருங்க)

160 வேணுமோ கோணவாய் விக்கா!

சடையன்:

கொக்கொக்!

முரு:

கூவலை! விடியுமின் கூவலை!

(விக்கி)

கழு பதினாயிரம் வேண்டும் - நாராயணனைக் கழுவிலேற்றினால் அவனுடன் கழுவேறுபவர் பதினாயிரம்பேர் உள்ளனர் என்பது கருத்து. சடையன் - இவன் குடிலனுடைய சேவகன். கொக்கொக் - சடையன் விக்கலினால் உண்டாகும் ஓசை.