உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

"

339

அருகில் கட்டிவிட்டுச் சென்றான். யாகக் குதிரை உலகமெங்கும் தேடியும் காணாமையால், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் அறுபதி னாயிரவரும் பாதாள லோகத்திற் சென்று தேடலாம் என்று எண்ணி பரத கண்டத்தின் கிழக்குப் பக்கத்தைத் தோண்டிக்கொண்டு பாதாளம் சென்றார்கள். குதிரையைக் கண்டார்கள். இவர்கள் தோண்டிய பெரும் பள்ளம் நீர் நிறைந்து கடலாயிற்று. சகர சக்கரவர்த்தியின் அறுபதி னாயிரம் பிள்ளைகளுக்கும் சகரர் (சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள்) என்பது பொதுப்பெயர். சகரர் தோண்டிய படியினால் கீழ்க்கடல் சாகரம் என்று பெயர்பெற்றது.

சிவபெருமான்

-

நக்கீரர் கதை

சண்பகமாறன் என்னும் பாண்டியனுடைய மனைவியின் கூந்தலில் நறுமணம் வீசிற்று. பாண்டியன், இந்த நறுமணம் கூந்தலில் இயற்கையாக உண்டாயிற்றோ. செயற்கையாக அமைந்ததோ என்று ஐயுற்றான். தனது ஐயத்தைத் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொன் வெகுமதி யளிப்பதாகக் கூறி, தமிழ்ச் சங்க மண்டபத்தில் பொற்கிழியைத் தொங்க விட்டான்.

அப்பொழுது ஆலவாய்க் கோவிலில் அருச்சனை செய்யும் தருமி, மணம்புரியப் பணம் இல்லாமல் இருந்தவன் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ள, அவர் 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி' என்று தொடங்கும் ஒரு செய்யுளை இயற்றி அதனைக் கொண்டு போய்ச் சங்கத்தாரிடம் படித்துக்காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்ளும் படி கூறினார். (குறுந்தொகை 2-ஆம் செய்யுளைக் காண்க.) தருமி அவ்வாறே சங்கத்தாரிடம் சென்று அச் செய்யுளைப் படித்துக் காட்டிப் பொற்கிழியைக் கேட்டான். சபையிலிருந்த நக்கீரர், “இச் செய்யுளில் மகளிர் கூ ந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று சொல்லியிருப்பதனால் இது குற்றமுள்ள செய்யுள்” என்று அச் செய்யுளில் குற்றம் கண்டு கூறினார்.

அதைக் கேட்ட தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று சிவபெரு மானிடம் நடந்ததைக் கூறினான். சிவபெருமான் புலவர் உருவத்தோடு சங்க மண்டபத்திற்கு வந்தார். வந்து, "என் செய்யுளில் குற்றம் கண்டவன் யார்?" என்று கேட்டார். நக்கீரர், தான் குற்றம் கண்டதாகக் கூறினார். “என்ன குற்றம்?” என்று சிவன் கேட்க, அவர் முன்பு கூறியது போல, “மகளிர்க்குக் கூந்தலில் இயற்கை மணம் உண்டென்பது குற்றம்”