உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

என்று கூறினார். சிவபெருமான் அதற்கு விடை கூற முடியாமல், தமது நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார். நக்கீரர் அதற்கும் அஞ்சாமல், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!" என்றார்.

திருஞானசம்பந்தரின் புனல்வாதம்

திருஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்றபோது பாண்டியன் சபையிலே அவருக்கும் சமணர்களுக்கும் சமயவாதம் நிகழ்ந்தது. அதில் புனல்வாதமும் ஒன்று. இரு சமயத்தாரும் தங்கள் மதக் கருத்தை எழுதிய பனையேட்டை வைகையாற்றில் விடுவது என்றும், யாருடைய ஏடு ஆற்றுக்கு எதிராகச் சென்று கரையேறுகிறதோ அவருடைய சமயமே மெய்ச் சமயம் என்று ஒப்புக்கொள்ளப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே திருஞானசம்பந்தரும் சமணரும் தத்தம் மதக் கொள்கையினை எழுதிய பனையேட்டை வைகையாற்றில் விட்டனர். சமணர் எழுதி விட்ட ஏடு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றது. திருஞானசம்பந்தர் விட்ட ஏடு வெள்ளத்திற்கு எதிராகச் சென்று கரை ஒதுங்கிற்று.

பக்கம்17

இமயமும் பொதிகையும் சமமான கதை

ஒருகாலத்தில் சிவபெருமான் மலையரசன் மகளாகிய பார்வதியைத் திருமணம் செய்தார். அத் திருமணம் இமயமலையில் நடைபெற்றது. அத் திருமணத்தைக் காணத் தேவரும் மனிதரும் ஏனை யோரும் இமயமலைக்குச் சென்றனர். அதனால் இமயமலை கனத்தி னால் தாழ்ந்து, பொதிகைமலை உயர்ந்தது. அதுகண்ட சிவபெருமான், அகத்திய முனிவரைப் பொதிகைமலைக்குப் போகும்படி கூறினார். அதன் படியே அகத்தியர் வந்து பொதிகைமலையில் தங்கினார். அப்போது, பளுவில்லாதபடியால் மேலெழுந்த பொதிகை மலை தாழ்ந்து, இமயமும் பொதிகையும் சமமாக நின்றன.

பக்கம் 18

சந்நு காதில் கங்கை வெளிப்பட்ட கதை

பகீரதன் என்பவன் நெடுங்காலம் தவம் இருந்து ஆகாய கங்கையைப் பூலோகத்தில் கொண்டு வந்தான். பூமியில் வந்த கங்கை பாய்ந்து ஓடியது. வழியில் சந்நு முனிவர் யாகம் செய்து கொண்டிருந்