உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

ஜீவ:

நாராயணன்:

20

கோவில் தானா காவலர் கடமை?

கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ!

அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர்.

மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு

25 மனோகர மாகிய சினகர மொன்றில்

30

35

உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர்

முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?

ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். (தனதுள்)

ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப்

பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே?

71

காவலர் – அரசர். பூபதி - அரசன்.

மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா - வீணாக. கௌசிகன் - கௌசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத் திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் – அரசன்.