உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

55

மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே

ஜீவ:

60

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

சக:

எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது

முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே.

சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ்

சாலவும் பொருந்தும். சகடரே! அதனால்

களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில!

ஒளித்த தென்நீ உரையா தெமக்கே?

ஆவ தாயின் அறிவியா தொழிவனோ?

இடையூ றென்கொல்? இடியே றன்ன

65 படையடு பலதே வன்றான் ஏதோ

விரும்பினன் போலும் வேறோர் கரும்பே!

இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக.

என்னை? சகடரே! இடையூ றென்னை?

70 பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் அடியனேன் சொல்பழு தாயின தில்லை.

75

முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள். ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள். விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும், ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்; நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை; என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும் இன்னல் தருவதொன் றில்லை, தாதையர்

73

சால மிக.

வேறோர் கரும்பு வேறொரு பெண். தொழும்பு அடிமை. மொய்குழல் – இங்கு வாணியைக் குறிக்கிறது. வியர்த்தம் - வீண். ஓராள் - நினையாள். நேராள் - உடன்படாள்.