உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வாணி:

ஜீவ:

வா:

75

அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே

நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் பேணி யொருமொழி பேசுவன்,

நேசமில் வதுவை நாசகா ரணமே.

புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே

6

தையலார் மையலாய் நேயம் பூண்டு

80

வாழ்வது கடமை. அதனில்

தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே.

85

கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில்

துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் வரியும் பாலையில்

திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது

6

7

90

தங்கி அங்கவர் அங்கங் குளிரத்

தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் நேருந் தாகம் நீக்குவான் நிமல

ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில்

உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் 95 ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும், இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,

வினயம் – பணிவு. நேசம் இல் அன்பு இல்லாத. ஆற்றுவர் செய்வர். கற்பனைக்கு - கட்டளைக்கு. கானல் - வெப்பம். பாலை - பாலைநிலம். தாருவாய் மரமாய். நிமல ஊற்று - நிர்மல ஊற்று; சுத்தமான ஊற்றுநீர். ஆறலை கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர். அயர்ச்சி - சோர்வு. இகம் -இம்மை, இவ்வுலக வாழ்க்கை.