132
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
(சிற்றெண்)
கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை தண் சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை வலமிகு சகடம் மாற்றிய அடியினை
(இடையெண்)
போரவுணர்க் கடந்தோய் நீ புணர் மருதம் பிளந்தோய் நீ நீரகிலம் அளந்தோய் நீ நிழல்திகழும் படையோய் நீ
(அளவெண்)
ஊழி நீ உலகு நீ உருவு நீ அருவு நீ ஆழி நீ அருளு நீ அறமு நீ மறமு நீ
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்று முதிர்கட லுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே.
தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா பெருந்தேவபாணி
(தரவு)
அலைகடற் கதிர்முத்தம் அணிவயிரம் அவையணிந்து மலையுறைமா சுமந்தேந்தும் மணியணைமேல் மகிழ்வெய்தி ஓசனைசூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும் அருளறமே அறமாக அயலார்கண் மயலாக இருளறநன் கெடுத்தியம்பி இருவினை கடிந்திசினோய்!