பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
133
(தாழிசை)
துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யும் துணிவினையாய் இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால் இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியால் - ளித்தனையாய் அருளெல்லாம் அடைந்தெங்கண் அருளுவதுன் - அருளாமோ?
மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைந்தோரைக் கதிபொருதக் கருவரைமேல் கதிர்பொருத முகம்வைத்துக் கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர்போல் நின்மினீர் எனவுணர்த்தல் நிருமல நின் பெருமையோ?
மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல் வினையறுக்கல் உறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென் றீங் கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ உலகமெல்லாம் உடன்றுறவா உடைமையுநின் உயர்வாமோ
(அராகம்)
அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர முரசதிர் இமிழிசை முரணிய மொழியினை
(அம்போதரங்கம்) (பேரெண்)
அணிகிளர் அவிர்மதி அழகெழில் அவிர்சுடர் மணியொளி மலமறு கனலி நின்னிறம் மழையது மலியொலி மலிகடல் அலையொலி முழையுரை அரியது முழக்கம் நின்மொழி
(இடையென்)
வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை ஒருவினை ஆகி உலகுடன் உணர்ந்தனை