உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



சீவகசிந்தாமணி பதுமையார் இலம்பகம் 163ஆம் செய்யுளில் அகப்பொருள் தென்தமிழ் என்று கூறப்படுகிறது. இதற்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரை காண்க.

ஐந்திணை ஐம்பது என்னும் நூல் அகப்பொருளைச் செந்தமிழ் என்று கூறுகிறது. திணைமாலை நூற்றைம்பதின் பாயிரம் அகப் பொருளை இன்தமிழ் என்று கூறுகிறது. பாண்டிக் கோவை 25ஆம் செய்யுள் அகப்பொருளைக் கொழுந்தமிழின் ஒண்துறை என்று கூறுகிறது. திருக்கோவையார் 20ஆம் செய்யுள் அகப்பொருளைத் தீந் தமிழின்துறை என்று கூறுகிறது (மயிலை சீனி. வேங்கடசாமி, ‘தமிழ் - அகம்’, Journal of Tamil Studies, No. 3, September 1973, pp. 1-3).

இறையனார் அகப்பொருள் உரையும் அகப்பொருளைத் தமிழ் என்று கூறுகிறது. “இனி நுதலிய பொருள் என்பது நூற் பொருளைச் சொல்லுதலென்பது. இந்நூல் என்னுதலிற்றோ வெனின் தமிழ் நுதலியதென்பது” என்றும், “இனி நூனுதவிய தூஉம் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்; தமிழ் நுதலியதென்பது” என்றும் அகப்பொருள் உரை கூறுகிறது.

அகப்பொருளின் பயன்

இறையனார் அகப்பொருளைக் கற்பதனால் உண்டாகும் பயன் என்ன என்பதை இந்நூலின் உரை கூறுகிறது. “இனிப் பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும் என்பது என் பயக்குமோ இது கற்க வெனின் வீடுபேறு மோட்சம்) பயக்கும் என்பது” என்றும், “இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட்கெல்லாம் இக்களவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான்” என்றும் உரைகூறுகிறது. அதாவது, பக்திக் காதல் மறுமையில் வீடு பேற்றை அளிக்கிறது என்று உரை கூறுகிறது. இறையனார் அகப் பொருள் ஞான நூல் என்றும் கூறப்படுகிறது. “மதுரைஆலவாயில் அழனிறக் கடவுள் சிந்திப்பான்; என்னை பாவம் அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று அது தானும் ஞானத்திடையாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்” என்று கூறியது காண்க. இந்த உரையின் கருத்துப்படி, இறையனார் அகப்பெருள் நூலைக் கற்றால் ஞானமும் அதன் பயனாகிய வீடுபேறும் பெறலாம் என்பது தெரிகிறது.