பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
159
இறையனார் களவியல் தோன்றியதேன்?
தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணம் இருக்கும் போது இறையனார் அகப்பொருள் (களவியல்) என்னும் பேரால் ஒரு புதிய அகப்பொருள் இலக்கணம் எழுதப்பட்டதேன்? பிற்காலத்தில், களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது அகப் பொருளுக்குப் பக்திக் காதல் என்ற புதிய பொருள் கற்பிக்கப்பட்டது. தொல்காப்பிய அகப்பொருள் உலகியல் காதலை மட்டும் கூறுகிற படியால், அது புதிய பக்திக் காதல் கருத்துக்கு உரிய ஆதார நூலாகப் பயன்படவில்லை. ஆகவே, பக்திக் காதலாகிய பேரின்பக் காதலுக்கு ஆதாரமான ஓர் இலக்கண நூல் தேவைப்பட்டது. இந்தத் தேவையை நிறைவு செய்ய இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் புதிதாக உண்டாக்கப்பட்ட டது. ஆனால், இறையனார் அகப்பொருள் சூத்திரங்கள் பக்திக் காதலைப்பற்றி எழுதிக்கொண்டு போகிறது. இந்த உரையைக் கேட்டுத்தான் உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மன் மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்தார் என்று கூறப்படுகிறது. களவியல் உரை கூறுவதைப் பார்ப்போம்:
இறையனார் அகப்பொருள்- வரலாற்று ஆய்வு
“அஃதேயெனின் ... அவ்வெட்டும் (எண்வகை மணமும் ) உலகினுள்ளன; இஃது (இறையனார் அகப்பொருள்) அன்னதன்று. இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை (இறையனார் அகப்பொருளை உலகவழக்கினோடு இயையானென்பது” (களவியல் முதலாம் சூத்திர உரை).
15ஆம் சூத்திர உரையில் “எனவே, இவ்வாற்றானும் உலகக் களவு (களவியல்) அன்று என்பதும் பெற்றாம்” என்றும், 31ஆவது சூத்திர உரையில் இல்லதனையே இல்லை என்றார்; இவன் உலகத்துத் தலைமகன் அல்லன்- புலவரால் நாட்டப்பட்ட தலைமகன் என்பதனை யாப்புறுத்தற்கு” என்றும் உரை கூறிச் செல்கிறது.
32ஆவது சூத்திர உரையில் “இவ்வாற்றானும் இஃது (இறையனார் களவியல்) உலகத்து இயல்பன்றென்பது பெற்றாம். மூப்புப்பிணி உள்வழிச் சாக்காடும் உண்மையாம் என்பது கடா. அதற்கு விடை எங்ஙனமோவெனின், இருதிங்கட் புக இவளும் பன்னீராட்டைப் பிராயத்தாய் இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய்ச் செல்வதல்லது,