உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



அரசாண்டனர். (சந்திரகுப்த மௌரியன் கி.மு. 322 இல் மகத இராச்சியத்தை ஏற்படுத்தினான். இவன் வம்சத்தின் கடைசி அரசனான பிருகத்ரதன் கி.மு. 185இல் தன் சேனைத் தலைவனான புஷ்யமித்திரனால் கொல்லப்பட்டு இறந்தான். பிறகு சுங்க இராஜ பரம்பரை நிறுவப்பட்டது)

பேர்போன மோரிய அரசர் சங்கச் செய்யுளில் கூறப்படுகிறது பற்றிச் சரித்திர ஆராய்ச்சிக்காரரும் மற்ற அறிஞரும் ஆராயத் தொடங்கினார்கள். மோரிய அரசர் மோகூர்மேல் படையெடுத்து வந்ததை இச்செய்யுள்கள் கூறுகிறபடியால் இத்தொடர்பு பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். (பாண்டியனுடைய சேனைத் தலைவனாகிய பழையன் என்பவன் மதுரைக்கு அருகில் மோகூர் என்னும் ஊரை யரசாண்டபோது, சேரன் செங்குட்டுவன் மோகூரின் மேல் படை யெடுத்துப் போய் மோகூர்ப் பழையனை வென்ற செய்தி பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்திலும் சிலப்பதிகாரத்திலும் கூறப்படுகின்றது)

மோரியர்-மோகூர் ஆராய்ச்சியைப் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அவைகளைப் பற்றியெல்லாம் இங்கு ஆராய்ந்தால் இடம் விரியும். ஆனால், அவ்வறிஞர்களின் கட்டுரைகளையும் நூல்களையும் இங்குக் குறிப்பிடுகிறேன்.

1. ‘Mauryan Invasion of South India’, Ch.l, The Beginnings of South Indian History, Krishnaswamy Aiyangar, 1918.

2. Bombay Gazetteer, 1896, Vol, Part II,pp.202-4.

3. ‘The Mauryan Invasion of Tamilakam’, Somasundara Desikar, Quarterly Jounral of the Mythic Society, Vol.XVIll, pp. 155-166.

4. ‘The Mauryan Invasion of the Tamil Land’, K.A.Nila kandam, Quarterly Jounral of the Mythic Society, Vol. XVI, p.304.

5. History of the Tamil, P.T. Srinivasa lyangar, 1929, pp.520-526.

6. ‘The Mauryan Invasion of the Tamilakam’, Somasundara Desikar, Indian Historical Quarterly, Vol.IV, pp. 135-145.

7. The Mauryan invasion Polity, V.R.Ramachandra Dikshidar pp.58-61

8. ‘Kosar and Vamba Moriyar’, Quarterly Journal of the Mythic Society. 1924.