பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
237
9. ‘The Moriyar of the Sangam Works’, K.G Sankar, J.R.A.S., 1924, pp.664- 667.
10. ‘Kosar of the Tamil Literature and the Satyaputra of Asoka Edicts’, J.R.A.S., 1923, pp.609-613.
11. Satyaputra of Asoka's Edict, J.R.A.S., 1922,No.2, pp.84-86.
12. Early History of India, Vincent A. Smith,4th Edition, 1957, p. 157.
13. The Cambridge History of India, Vol. l.p.596
14. ‘Maurya Invasion of South India’, A Comprehensive History of India, Vol. II, Edited by K.A. Nilakanta Sastri, 1957, pp. 501-503.
15. ‘தமிழகமும் மோரியர் படையெடுப்பும்’, டாக்டர் கே. கே. பிள்ளை. பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை வெள்ளி விழா மலர், 1961, பக்கம் 359-363.
பண்டித மு. இராகவையங்கார் தாம் 1915ஆம் ஆண்டில் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இதுபற்றிக் கூறியுள்ளார். இச்செய்யுளில் கூறப்படுகிற மோரியரை ஐயங்கார், சமுத்திர குப்தன் என்று கூறுகிறார். இது மிகவும் பிழைபட்ட செய்தியாகையால் இவர் கூற்றை அறிஞர் ஏற்றுக்கொள்ள வில்லை.
பி.தி. ஸ்ரீநிவாச அய்யங்கார், 1929இல் தாம் எழுதிய தமிழர் சரித்திரம் என்னும் நூலில் (History of the Tamils, P.T. Srinivasa Ayengar, 1929, p.520-526) இது பற்றி ஆராய்கிறார். இவர் ஆராய்ச்சியும் உண்மை நாடுவதாக இல்லை.
மேற்கண்ட மூன்று சங்கக் செய்யுட்கள் மோரியர் படையெடுத்து வந்த செய்தியைக் கூறுகின்றன.ஆனால், யார் மேல் படையெடுத்து வந்தனர் என்பதைக் கூறவில்லை. அகம் 251 ஆம் செய்யுள் மட்டும் மோரியர் மோகூர் மேல் படையெடுத்து வந்தனர் என்பதைக் கூறுகின்றது.
மோகூர் என்னும் ஊர் பாண்டி நாட்டில் இருந்தது என்பதையும் அவ்வூரையாண்ட பழையன் என்னும் அரசனைச் சங்க காலத்திலிருந்த சேரன் செங்குட்டுவன் வென்றான் என்றும் பதிற்றுப்பத்து 5ஆம் பத்தினாலும் சிலப்பதிகாரத்திலிருந்தும் அறிகிறோம். ஆனால், மோரியர் இந்த மோகூரின்மேல் படையெடுத்து வந்தனரா? மோரியருக்கும் மோகூருக்கும் என்ன பகை? மோகூர் மன்னன் ஒரு