34
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
களுடைய மக்கள் அல்லது உறவினர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழக் கி. பி. 250 இல் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள் என்று அறிகிறோம்.
களப்பிரர் வென்ற சேர, சோழ, பாண்டிய மன்னரின் பெயர்கள் தெரியவில்லை. மூவேந்தர்களையும் இவர்களின் கீழடங்கியிருந்த சிற்றரசர்களையும் களப்பிரர் வென்றனர் என்று வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. "அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்ட”னன் என்று வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் கூறுகிறது (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-40).
களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றின பிறகு 'கடைச்சங்க காலம்’ முடிவடைந்தது. களப்பிரர், மேற்கூறியபடி, கி. பி. மூன்றாம் நூற்றாண் டின் இடைப்பகுதியில் கி. பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள் என்று கொள்வதில் தவறு இல்லை.
சில களப்பிர அரசர்கள்
களப்பிரர் முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர்க ளுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது, அவர்களுடைய ஆட்சி செங்கோல் ஆட்சியாக இருந்ததா, அடக்கி அரசாண்டார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் எத்தனை பேர் அரசாண்டார்கள், அவர்க ளுடைய பெயர் என்ன என்னும் வரன்முறையான சரித்திரம் கிடைக்க வில்லை. சங்க காலத்துச் சேர, சோழ, பாண்டியர் வரலாறே வரன் முறையாகக் கிடைக்காத போது அன்னியராகிய களப்பிரரைப் பற்றின வரன்முறையான வரலாறு எப்படிக் கிடைக்கும்? முன்னூறு ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த செப்பேடுகளோ கல் வெட்டுகளோ இதுவரையில் ஒன்றேனும் கிடைக்கவில்லை. அவர்கள் வழங்கின காசு அவர்கள் காசுகளை வெளியிட்டிருந்தால் ஒன்றேனும் இதுவரையில் கிடைக்க வில்லை. அக்காலத்தில் வரலாறு எழுதும் வழக்கமும் இல்லை. அவர்கள் கட்டின கோயில் கட்டடங் களோ சிற்பங்களோ எதுவும் காணப்படவில்லை. ஆகவே, அவர்க ளுடைய வரலாற்றையறிவதற்கு யாதொரு சான்றும் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு இலக்கியச் சான்றுகள் மட்டுங் கிடைக்கின்றன. அவ்வளவுதான்.
-
-