பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர், துளு நாடு
35
களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி. பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும் கொடியும் கழுகுமிவை கூடி - வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு போமாறு போமாறு போம்
என்பது அந்தப் பாடல். களப்பாள (களப்பிர)அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளும் அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது, போர்க் களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்துமடியு மாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளுக்கு இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர் களோடு போர்செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.
மற்றும் நான்கு பழைய வெண்பாக்களையாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிறது. அந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை:
சேர மன்னன் பாடியது: தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல் தனை விளைத்தார் முற்ற மதுதானாம் - கனைசீர் முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து
சோழ அரசன் பாடியது:
அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதரித்த வந்நாள் - முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை