உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


அனுப்பினான். கோதாபயன் அதைத் தக்கமுறையில் அடக்கஞ் செய்துவிட்டு, மேகவண்ணாபயன் என்று பெயர் சூட்டிக்கொண்டு அரசனானான்.

மேகவண்ணாபயன் (கி. பி. 254-267)

கோதாபயன், மேகவண்ணாபயன் என்று பட்டப்பெயர் கொண்டு பதின்மூன்று ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் வேதுல்லியமதம் (மகாயான பௌத்தம்) பரவத்தொடங்கிற்று. பழைய தேரவாதப் பௌத்தத்துக்கு மாறுபட்டதான வேதுல்லியமதத்தை நீக்கி இவ்வரசன் பழைய தேரவாதப் பௌத்தத்தை நிலை நிறுத்தினான். மகாயான பௌத்தத்தைச் சார்ந்த பௌத்தப் பிக்குகளை இவ்வரசன் நாடு கடத்தினான். நாடுகடத்தப்பட்ட பிக்குகள் தமிழ்நாட்டுக்கு வந்து சோழ நாட்டில் தங்கினார்கள். அக்காலத்தில் சோழ நாட்டில் மகாயானப் பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரன் என்னும் தமிழப் பிக்கு, நாடுகடத்தப்பட்டு வந்த சிங்கள நாட்டுப் பிக்குகள் கூறியதைக் கேட்டுத் தான் இலங்கைக்குப் போய் மேகவண்ணாபய அரசனுடைய சபையில் தேரவாதப் பௌத்தர் களோடு சமயவாதஞ்செய்து வென்றார். மேகவண்ணாபயன் வெற்றி பெற்ற சங்கமித்திரரை ஆதரித்தான். தன்னுடைய மக்களான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களைச் சங்கமித்திரரிடத்தில் கல்வி கற்க விட்டான். மேகவண்ணாபயன் காலமான பிறகு அவன் மகனான ஜேட்டதிஸ்ஸன் அரசனானான்.

ஜேட்டதிஸ்ஸன் (கி. பி. 267 - 277)

இவன் மேகவண்ணாபயனுடைய மூத்த மகன். இவன் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவன் சங்கமித்திரரிடம் கல்வி பயின்ற மாணவன். ஆனால், அவரிடத்தில் இவன் பகை கொண்டிருந்தான். ஆகையால், சங்கமித்திரர் இவன் காலத்தில் இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்கு வந்துவிட்டார்.

மகாசேனன் (கி. பி. 277 - 304)

ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். இவன் அரசனாவதையறிந்த இவனுடைய குருவாகிய சங்கமித்திரர் சோழநாட்டிலிருந்து இங்கு வந்து தம்முடைய கையினாலே இவனுக்கு முடிசூட்டினார். இவ்வரசனுடைய ஆதரவைப்-