உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



ஜைன சமய வளர்ச்சி

ஜைன, பௌத்த மதங்கள் செழித்து வளர்ந்ததையும் சைவ வைதிக மதங்கள் ஒடுங்கிப் போவதையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெளிவாகக் கூறுகிறார்.

மேதினிமேல் சமண்சையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே ஆதி அரு மறைவழக்கம் அருகி அரன் அடியார் பால் பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாதொழியக் கண்டு ஏதமில் சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார் (திருஞான சம்பந்த நாயனார் புராணம் 18)

(சமண்-சமணர், சாக்கியர்- பௌத்தர், அருவறை வழக்கம்-வேத வேள்வி செய்யும் வைதிக மதம், அரன்-சிவன், பூதிசாதனம்-திருநீற்றுச் சாதனம்)

களப்பிரர் காலத்தில் வளர்ந்து சிறப்படைந்திருந்த ஜைன, பௌத்த மதங்கள் அவர்களின் ஆட்சிக்குக் காலத்துக்குப் பிறகும் சிறப்படைந்திருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார்.

மெய்வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக் கைவகை முறைமைத் தன்மை கழியமுன் கலங்குங்காலை (திருஞானசம்பந்த நாயனார் புராணம். 599)

என்றும்

பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள்- எல்லாம் பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடை மயிற்பீலி யோடு மூழிநீர் கையிற்பற்றி அமணரே யாகி மொய்ப்ப (திருஞான சம்பந்த நாயனார் புராணம். 601)

(பூழியார் தமிழ்நாடு-பாண்டிநாடு; பாழி-குகை; அருகா- ஜைனர்)

என்றும்

பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியு முக்குடையுமாகித் திரிபவர் எங்கும் ஆகி அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினில் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங்காலை (திருஞானசம்பந்த நாயனார் புராணம். 602)