உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

81


என்றும் சேக்கிழார் கூறுகிறார். இது களப்பிரர் வீழ்ச்சிக் காலத்துக்குப் பின் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமயங்கள் இருந்த நிலை. இந்த நிலை களப்பிரர் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்தது.

மதுரையை யாண்ட களப்பிரர் அரசன் ஒருவன் சிவன் கோவில் களில் வழிபாடு செம்மையாக நடக்காதபடி தடைசெய்தான். சிவன் கோவிலில் சந்தனக் காப்பு வழிபாடு நடக்காதபடி தடைசெய்தான் (மூர்த்தி நாயனார் புராணம் 17). அவன் சடையன் (சிவன்) அடியாரை வன்மை செய்தான்.

மலைக்குகைகளிலே சமண (ஜைன) சமயத்து முனிவர்கள் தங்கித் தவஞ்செய்தார்கள். அவர்கள் பாண்டி நாட்டிலே எட்டுக் குன்றுகளில் இருந்தனர். அந்த மலைகளை ‘எண்பெருங் குன்றம்' என்றும், அங் கிருந்து தவஞ்செய்தவர்களை ‘எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்’ என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார் (திருஞானசம்பந்த நாயனார் புராணம் 631,855). ஆனைமாமலை ஆதியாய இடங்களில்’ ஜைன முனிவர் இருந்ததைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார் (திருவாலவாயப் பதிகம்). ‘எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்’ என்று கூறுவதன் பொருள் மலையொன்றுக்கு ஆயிரம் பேராக எட்டு மலைகளில் எட்டாயிரம் சமணர் என்று கருதக்கூடாது. ஆயிரம் என்பது இங்குப் பெருந்தொகையைக் குறிக்கிறது.

ஆனைமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணர் மலை, கழுகுமலை, சித்தன்னவாசல், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, நாகமலை (விக்கிரம மங்கலம்), சித்தர்மலை, விருச்சியூர், மருகால்தலை முதலான மலைக்குன்றுகளில் ஜைனத் துறவிகள் தங்கித் தவஞ்செய்ததற்கு அடையாளமாக இன்றும் அங்கெல்லாம் ஜைனத் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும் காணப்படுகின்றன. களப்பிரர் வருவதற்கு முன்னேயே இந்தக் குகைகளில் ஜைன முனிவர் இருந்து தவஞ்செய்தனர். சில குகைகளில் பௌத்தப் பிக்குகளும் தங்கித் தவஞ்செய்தார்கள்.

களப்பிரர் ஆட்சிக் காலத்திலே ,பல்லவ அரசர் ஆட்சிசெய்த தொண்டை நாட்டிலும் ஜைன மதம் சிறப்பாக இருந்தது. குணபரன் என்றும் குணதரன் என்றும் சிறப்புப் பெயர் படைத்த மகேந்திரவர்மனும் ஜைன சமயத்தவனாக இருந்தான் என்று அறிகிறோம். தொண்டை நாட்டிலே பாடலிநகரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) அந்தக் காலத்தில் பேர் போன திகம்பர ஜைன மடம் இருந்தது. அந்த ஜைன மடத்தில் சிம்ம