உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

99


முழங்குகடல் முழவின் முசிறி'

(புறம். 343:3-10)

(மனைக்குவை இய - வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட, கறி மூடை – யவன மரங்கலங்கள் கொண்டு வந்த.

மிளகு மூட்டை. கலம்தந்த

பொற்பரிசம் - விலையாகிய பொன்)

கிரேக்கரும் ரோமரும் மட்டும் மிளகை வாங்கவில்லை. அக் காலத்தில் உலகத்திலே எல்லா மக்களும் மிளகை வாங்கினார்கள். அக்காலத்தில் மிளகாய் கிடையாதபடியால் எல்லாரும் மிளகை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள். பாரத நாட்டு மக்களும் மிளகைப் பயன்படுத்தினார்கள். முசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு கொண்டு போகப்பட்டபடியால் மிளகுக்கு 'மரிசி' என்று பெயர் உண்டாயிற்று. முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் தான் மரிசி என்று மருவிற்று. உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இடையில் வெள்ளப் பெருக்கினால் அழிந்துவிட்டது. கிபி. 1341 இல் பெய்த பெருமழையின் காரணமாகப் பேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முசிறிப் பட்டினம் வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயிற்று. அதனால் அதனையடுத்தப் புதிய காயல்களும் துருத்தி களும் (மணல் தீவு) ஏற்பட்டன. முசிறித் துறைமுகம் முழுகிப் போனபடியால் அதற்கு அருகில் பிற்காலத்தில் கொச்சித் துறைமுகம் ஏற்பட்டது.

...

..

..

...

..

..

...

..

...


பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி' (அகம், 149: 8-11)

சுள்ளியம் (பேரியாறு - பெரியாறு. நன்கலம் - நல்ல மரக்கலம். கறி - மிளகு)

முசிறித் துறைமுகம் ஆழமில்லாமல் இருந்தபடியால் யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் தூரத்திலேயே நின்றன. ஆகவே தோணிகளில் மிளகை ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் ஏற்றிவிட்டு அதன் விலையாகப் பொன்னை வாங்கிக் கொண்டு வந்தார்கள். பரணர் இதை இவ்வாறு கூறுகின்றார்.

‘மனைக்குவைஇய கறிமூடையால்

கலிச் சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியாற் கரைசேர்க்குந்து