உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


பாகங்களிலிருந்து பலநாட்டு வாணிகர் வந்தனர். ரோமபுரியிலிருந்து யவன வாணிகர் அங்கு வந்து தங்கி வாணிகஞ் செய்தார்கள். உரோமர் எகிப்து நாட்டைக் கைப்பற்றின பிறகு அவர்கள் அராபியரின் வாணிகத்தையும் கைப்பற்றினார்கள். அராபியர் வாணிகஞ் செய்திருந்த செங்கடல் துறை முகப்பட்டினங்களைக் கைப்பற்றி அராபியரின் வாணிக ஆதிக்கத்தை ஒழித்தார்கள். செங்கடல் வாணிகத்தைக் கைப்பற்றின யவனர், செங் கடலைக் கடந்து வந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குகரைப் பட்டினங்களிலும், பாரசீகக் குடாக்கடலிலும் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தார்கள். யவனர் செங்கடலுக்கு இட்ட பெயர் எரித்தரைக் கடல் (Maris erythraei) என்பது. எரித்ரை என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்குச் செங்கடல் என்பது பொருள். பாரசீகக் குடாக்கடலில் வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் குடாக் கடலுக்கும் எரித்ரைக் கடல் என்று பெயரிட்டனர். அக் காலத்தில் அவர்கள் நடுக்கடலில் கப்பல் பிரயாணஞ் செய்யாமல் கரையோரமாகவே பிரயாணஞ் செய்தார்கள். சிலகாலஞ் சென்றபிறகு யவனர் பாரசீகக் கடலிலிருந்து சிந்து, கச்சு, குஜராத்தி நாடுகளுக்குக் கடல் வழியே வந்து வாணிகஞ் செய்தார்கள். பிறகு இந்தியாவில் மேற்குக் கரைத் துறைமுகங்களுக்கும் சேரநாட்டு முசிறிப் பட்டினத்துக்கும் வந்தார்கள். அவர்கள் அரபிக் கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அரபிக் கடலுக்கும் எரித்ரைக் கடல் (செங்கடல்) என்றே பெயர் கூறினார்கள். பிறகு குமரிக்கடல், வங்காளக் குடாக்கடல் ஆகிய கடல்களுக்கு வந்து தமிழகத்தின் கிழக்குக் கரையிலும் வாணிகஞ் செய்தார்கள் அவர்கள். குமரிக் கடலுக்கும் வங்காளக் குடாக் கடலுக்கும் எரித்ரைக் கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள்.

யவனர் அக்காலத்தில் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை ஓரமாகவே பிரயாணம் செய்தபடியால், அவர்கள் முசிறி முதலான தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து போகப் பல மாதங்கள் சென்றன. அவர்கள் அரபிக் கடலின் ஊடே நடுக்கடலில் பருவக்காற்றின் உதவியினால் பிரயாணஞ் செய்ய அக்காலத்தில் அறியவில்லை. ஆனால், பருவக்காற்றின் உதவி யினால் வெகு விரைவில் நடுக்கடலினூடே பிரயாணஞ் செய்யத் தமிழரும் அராபியரும் அறிந்திருந்தார்கள். பருவக்காற்றின் உதவியை அறியாத காரணத்தினால் யவனர் முசிறித் துறைமுகப் பட்டினத்துக்குக் கரையோரமாக வந்துபோக நெடுங்காலஞ் சென்றது. கடைசியாகக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க