உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

61


அரபு வாணிகர்

தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்துவந்த அராபிய வாணிகர் சேர நாட்டின் முசிறித் துறைமுகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் வாணிகஞ் செய்த இடத்துக்குப் பந்தர் என்று பெயரிட்டிருந் தார்கள். பந்தர் என்றால் அரபு மொழியில் கடைவீதி என்பது பொருள். முசிறித் துறைமுகத்துப் பந்தரில் முத்துக்களும் விலையுயர்ந்த நகைகளும் விற்கப்பட்டன. பதிற்றுப்பத்து 6ஆம் பத்தில் (செய்யுள் 5) “நன்கல வெறுக்கைத் துஞ்சும் பந்தர்" என்றும், 7ஆம் பத்து 7ஆம் செய்யுளில், "பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” என்றும், 8ஆம் பத்து 4ஆம் செய்யு ளில் “பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்” என்றும் பந்தர் அங்காடி கூறப் படுகிறது. அராபியர் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்த படியால் அரிசி என்னுந் தமிழ்ச் சொல் அரபு மொழியில் சென்று ஓரூஜ் என்று வழங்குகிறது. அராபியர், அக் காலத்தில் தமிழ்நாடாக இருந்த சேரநாட்டிலிருந்து மூங்கிலைக் கொண்டுபோய் அரபி நாட்டில் வளர்த்தார்கள். அராபியர், தமிழ்நாட்டுப் பொருள்களை, முக்கியமாகச் சேரநாட்டு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறை முகங்களிலும் எகிப்து நாட்டில் நீல நதி, கடலில் கலக்கும் இடத்திலிருந்தது. அலக் சாந்திரியத் துறைமுகப்பட்டினத்திலும் விற்றார்கள். அங்கிருந்த பொருள்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் அராபியர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்யவில்லை. தமிழர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் போய் அங்கிருந்து கொண்டுவந்த பொருள்களை இங்கிருந்து அராபியர் வாங்கிக்கொண்டு போய் வெளிநாடுகளில் விற்றார்கள். தூரக் கிழக்கு நாடுகளில் உண்டான பொருள்களை மேற்கு நாடுகள் வாங்கிக்கொண்டு போவதற்குத் தமிழ்நாடு அக்காலத்தில் மத்திய வாணிக இடமாக அமைந்திருந்தது. யவன வாணிகர்

கிரேக்க நாட்டாரும் உரோம் நாட்டாரும் அக்காலத்தில் யவனர் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்கள். உரோம் சாம்ராச்சிய காலத்தில், கி.மு. முதலாம் நூற்றாண்டில், எகிப்து தேசத்தை உரோமர் கைப்பற்றிக் கொண்டார்கள். அக்காலத்தில் எகிப்து நாட்டில் மத்திய தரைக்கடல் ஓரத்திலிருந்த அலக் சாந்திரியத் துறைமுகப்பட்டினம், ஆசிரியா - ஐரோப்பாக் கண்டங்களின் மத்தியத் துறைமுகப்பட்டினமாக இருந்தது. அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினத்தில் உலகத்தின் பல