உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

இரண்டாவது எண்ணிலுள்ள ‘குவிர ஆந்தை வேள் ஆதன்’ என்பதைக் குவிர ஆந்தை என்னும் வேள் ஆதன் என்றும் இரண்டு பெயர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஆறாவது எண்ணில் உள்ள ‘மதிரை ஆந்தை விஸுவன் என்பதை மதிரை ஆந்தை என்றும் விசுவன் என்றும் இரண்டு ஆட்களாகக் கொள்ள வேண்டும். இந்தப் பெயருள்ள பத்து ஆட்களும் பத்துப் படுக்கைகளைச் செய்து கொடுத்தார்கள்.

குவீர ஆந்தை என்னும் பெயரில் உள்ள குவீரன் என்னும் பெயர் விக்கிரம மங்கலப் பிராமிக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. அங்குப் பொதலை குவீரன், செங்குவீரன் என்று குவீகன் என்னும் பெயர் காணப்படுகிறது. நான்காவதிலுள்ள ஆந்தை அரிதி என்னும் பெயரில் உள்ள அரிதி என்னும் பெயர் கருங்காலக்குடி பிராமி எழுத்தில் எட்டியூர் அரிதி என்று காணப்படுகிறது. இதனால், குவீரன் அரிதிஎன்னும் பெயர்கள் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பது தெரிகிறது.

ஆந்தை, ஆதன் என்னும் பெயர்கள் பிராமிக் கல்வெட்டில் அந்தை, அதன் என்று விக்கிரமமங்கலத்திலும், அழகர்மலையிலும் இந்த மேட்டுப்பட்டிக் கல்வெட்டில் எழுதப்பட்டிருப்பது போலவே எழுதப்பட்டுள்ளன.

அடிக்குறிப்புகள்

1. Madras Epigraphy Report 1908, Part II, Para 5, 6.

2. Madras Epigraphy Report, 1908, Para. 59.

3.

Early South Indian Palaeography, 1967, pp. 262-266.

4. Seminar on Inscriptions 1966 Edited by R. Nagaswamy, p. 62.