உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. புகழூர் பிராமி எழுத்து

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் புகழூர் ஒரு நிலையமாகவும் இருக்கிறது. புகழூரின் பழைய பெயர் புகழியூர். இவ்வூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுத பாளையம் என்னும் கிராமமும் அதன் அருகில் ஆறுநாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்று களும் உள்ளன. இந்தக் குன்றுகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளும், குகைக்குள்ளே தரையில் கற்படுக்கைகளும், கற்படுக்கை களின் ஓரத்தில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கடைச்சங்க காலத்தவை என்பதில் ஐயமில்லை.

1

ஆறு நாட்டார் மலையிலுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் பார்ப்போம். முதலில், சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் 1927-28ஆம் ஆண்டின் 343ஆம் எண்ணாகப் பதிவு செய்துள்ள கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்துக்கள் இரண்டு வரிசையாக எழுதப்பட்டுள்ளன. முதல் வரியில் பத்து எழுத்துக்களும் இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும் உள்ளன. இந்த எழுத்துக்களின் வரி வடிவம் இவை.

THE GPSI+D

பாறையில் பொளிவுகளும் புரைசல்களும் இருப்பதனால் சில எழுத்துக்கள் உருத்தெரியாமல் இருக்கின்றன. அனாலும் கூர்ந்து பார்த்து இவற்றைப் படிக்க இயலும். முதல் வரியில் கருவூர் பொன் வாணிகன் என்றும் இரண்டாம் வரியில் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி மற்ற எழுத்துக்களை அதிட்டானம் என்றும் படிக்கலாம். இரண்டாவது வரியில் முதல் எழுத்து பொளிந்து சரியான உருவம் தெரியாமல் இருக்கிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்கள் த்தி என்பவை.

திரு. டி.வி. மகாலிங்கமும்2 திரு. ஐ. மகாதேவனும்’> இவற்றைப் படித்துள்ளனர். திரு. டி.வி. மகாலிங்கம் இரண்டாம் வரியில் முதல்