உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

என்று படித்துப் பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்று தீர்மானிக்கலாம்.

புகழூர்ப் பிராமி எழுத்துக் கல்வெட்டு இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவின் 1927-28 ஆம் ஆண்டுத் தொகுப்பில் 346ஆம் எண்ணுள்ளது.4 இதில் ஒரே வரியில் இருபத்திரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதனால் சில எழுத்துக்களின் சரியான வடிவத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. ஆனாலும் படிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது. (இதில் புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள்)

நளளிவ ஊாப்பிடந தை மக ன கீ ர ன கொறறன இந்த எழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறு அமைகிறது:

'நள்ளிவ்ஊர்ப்பிடந்தை மகன் கீரன்கொற்றன்' திரு. டி.வி. மகாலிங்கம் இதை இவ்வாறு படித்துள்ளார் :5

'நாளாளப ஊர் பிடந்தை மகன் கீரன் கொற்றன்’, இவ்வாறு படித்த பிறகு இவர் ‘பிடந்தை’ என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: ஆதன்+தந்தை = ஆந்தை என்றாவது போலப் பிடன்+தந்தை பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டாரன், தந்தை பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன்.

=

முதல் ஆறு எழுத்துக்களை 'நளாளப ஊர்' என்று இவர் படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பதை பிடன் தந்தை என்று பிரிப்பதும் தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பது ஒரே சொல். அஃது ஓர் ஆளைக் குறிக்கிறது. பிடன் என்பதற்கும் தந்தை என்பதற்கும் இவர் கூறுகிற பொருள்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை. 'மகன் கீரன் கொற்றன்' என்று மற்ற எழுத்துக்களைப் படித்திருப்பது முழுவதும் சரி.