உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

18. ஐயர்மலை பிராமி எழுத்துக்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழித்தலை வட்டத்தில் ஐயர்மலை என்னும் ஊரில் ஐயர்மலை இருக்கிறது. திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள குழித்தலை நிலையத்தி லிருந்து ஆறு கல் தொலைவில் இந்த மலை இருக்கிறது. ஐவர் மலை என்னும் ஊர் இனாம் சத்திய மங்கலத்தைச் சார்ந்தது. ஐயர்மலை என்னும் பெயர் பிற்காலத்தில் அமைந்தது போலத் தோன்றுகிறது. இதன் பழைய பெயர் ‘ஐவர்மலை’என்றிருக்கவேண்டும். ஏனென்றால் பழைய மலைக் குகைகள் ஐவர்மலை என்றும், பாண்டவமலை என்றும், பஞ்ச பாண்டவமலை என்றும் வேறு சில இடங்களில் பெயர் கூறப்படுவதை அறிகிறோம். மலையில் உள்ள குகைக் குன்றுகள் பாண்டவரோடு இணைத்துப் பெயர் கூறப்பட்டன. ஆகவே ஐயர்மலை என்று இப்போது கூறப்படுகிற பெயர் பழங்காலத்தில் ஐவர்மலை என்று இருந்து பிற்காலத்தில் ஐயர்மலை என்று வழங்குகிறதுபோலத் தோன்றுகிறது.

ஐயர்மலை என்னும் இவ்வூரின் நடுவில் இருக்கிற ஐயர்மலை மேல் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை இரத்தின கிரீசுவரர் கோயில் என்று கூறுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த மலைக்கு வாட்போக்கிமலை என்று பெயர் வழங்கி வந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரத்தில் வாட்போக்கிமலையில் எழுந்தருளியுள்ள இரத்தினகிரீசு வரரையும் சுரும்பார் குழலியம்மையையும் பாடியுள்ளார். இந்த மலைக்கு மாணிக்கமலை, இரத்தினகிரி என்னும் பெயர்களும் உண்டு.

1

நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய பிராமி எழுத்துக் கல்வெட்டு இந்த மலையின் உச்சியில் இருக்கிறது. இந்த மலைமேல் வேறு இடத்தில் மூன்று இடங்களில் கற்படுக்கைகள் உள்ளன. இவை கடைச் சங்க காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. மூன்று இடங்களில் உள்ள கற்படுக்கைகளுக்கு இவ்வூரார் ‘மஞ்சனமெத்தை' என்று பெயர் கூறுகிறார்கள். முதல் மஞ்சன மெத்தை, இரண்டாம் மஞ்சன மெத்தை. இவற்றுக்கு மேலேயுள் ளதை மூன்றாம் மஞ்சன மெத்தை என்று பெயர் கூறுகிறார்கள். இந்தப் பெயர்