உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

‘மஞ்சமெத்தை' என்றிருக்க வேண்டும். மஞ்சன மெத்தை என்று கூறுவது பாமரர் பகர்ச்சி என்று தோன்றுகிறது. மஞ்சனம் என்றால், குளித்தல் நீராடுதல் என்பது பொருள்; மஞ்சம் என்பதற்கு இருக்கை, படுக்கை, உட்காரும் இடம் என்றும் பொருள். ஆகவே, கற்படுக்கை என்னும் பொருளில் மஞ்ச மெத்தை (மஞ்சம்-படுக்கை. மெத்தை- நிலை) என்று வழங்கப்பட்டுப் பிற்காலத்தில் மஞ்சன மெத்தை என்று தவறாக வழங்கப்படுகிறது என்பது தெரிகிறது. உயரத்தில் உள்ள மூன்றாவது மஞ்ச மெத்தையில் ஆறு கற்படுக்கைகளும் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இந்தக் கல்வெட்டு அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது:2

பனைதுறை வெ ஸ ன அதடஅனம

இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கலாம். பனைதுறை வெஸன் அதடஅனம்.

இது மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியம். அவை பனைதுறை வெஸன் அதடஅனம் என்பவை இதனை விளக்குவோம்: முதல் நான்கு எழுத்துக்கள் பனைதுறை என்பவை. பனைதுறை என்பது ஓர் இடத்தின் பெயர். அடுத்த சொல்லில் கூறப்படுகிற வெஸன் என்பவர் இவ்வூரில் இருந்தவர் என்று தெரிகிறது. இரண்டாவது சொல் ‘வெஸன்' என்பது. இதை வேஸன் என்றும் படிக்கலாம். வேஸன் என்பதில் ஸ என்பது வடமொழி எழுத்து. வெஸன் அல்லது வேஸன் என்பது தமிழ்ப் பெயராகத் தோன்றவில்லை; இவர் பௌத்தராகவோ, சைனராகவோ இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இந்தப் பெயருக்கு அடுத்துள்ள ‘அதடஅனம்' என்னும் சொல்லைக்கொண்டு, இவர் இந்த கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார் என்று தெரிகிறது. மூன்றாவது சொல்லாகிய அதட அனம் என்பது தவறாக எழுதப்பட்டிருக்கிறது. அகரத்தை அடுத்துள்ள தகர எழுத்து நிகரமாக எழுதப்பட வேண்டும். அதற்கு அடுத்த டஅ என்னும் எழுத்துக்களை டா என்றும் எழுதியிருக்க வேண்டும். ஆனால், அக் காலத்து வழக்கப்படி டஆ என்று எழுதப்பட்டுள்ளது. இதை டா என்று படிக்க வேண்டும். டா என்பதிலும் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்து ட்டா என்று எழுதப்பட வேண்டும். ட் என்னும் டகர ஒற்று