உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5 நாட்டுப் புத்தகசாலைகளைப் பற்றிப் போட்டி ஏற்பட்டது. பெர்கமம் நாட்டு நூல்நிலையம், அலெக்ஸாந்திரியா நகரத்து நூல் நிலையத்தை விடச் சிறப்படைந்துவிடுமோ என்று ஐயுற்ற டாலமி அரசன், தனது எகிப்து தேசத்திலிருந்து பேபரைஸ் எழுது கருவி களைப் பெர்கமம் நாட்டுக்கு அனுப்பக்கூடாதென்று உத்தரவிட்டான். இதனால், பெர்கமம் நாட்டில் அதிகமான நூல்கள் எழுதப்படுவது தடைபடும் என்பது அவன் கருத்து. பெர்கமம் நாட்டாருக்கு பேபரைஸ் கிடைக்காமற் போகவே, அந்நாட்டார் மெம்ரேனா என்னும் தோற்கருவிகளைக் கையாண்டனர்.

இவர் கூறும் இச்செய்தி உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. ஆனால், தோலினால் எழுது கருவிகளை உண்டாக்கி வெளிநாடுகளிலும் விற்பனை செய்து பேர்பெற்ற இடம் பெர்கமம் என்னும் நகரம் என்பது இதிலிருந்து உறுதிப்படுகிறது.

கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து, தோல் எழுதுகருவி மெல்ல மெல்ல நாடெங்கும் வழங்கலாயிற்று. பேபரைஸ் உபயோகமும் இருந்து வந்தது. படிப்படியாகத் தோற்கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் தோல் எழுது கருவிகள் முக்கிய இடம் பெற்றன. சீசரியா (Caesarea) என்னும் இடத்தில் இருந்த ஒரிஜன் (origen), பாம்பிலஸ் (Pamphilus) என்பவர்கள் அமைத்திருந்த நூல் நிலையங்கள் பாழடைந்துவிட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நூல் நிலையங்களைப் புதுப்பித்துச் செம்மைப்படுத்திய அகசியஸ், யூசொய்யஸ் என்னும் இரண்டு பாதிரிமார்கள், இந்நிலையங்களிலிருந்த சிதைந்து போன பேபரைஸ் சுவடிகளைத் தோல்களில் எழுதிவைக்கும்படி ஏற்பாடு செய்தார்கள்.

கான்ஸ்டான்டின் என்னும் சக்கரவர்த்தி தமது கான்ஸ்டான்டி நோபில் என்னும் நகரத்திலிருந்த 50 கிறித்துவக் கோயில்களுக்கு 50 விவிலிய நூல்களை வெல்லம் என்னும் தோல்களில் எழுதிவைக்கும் படி கி.பி. 332-இல் உத்தரவு செய்தார். (இத்தோற்கருவிகள், புத்தக உருவ அமைப்பிலே செய்யப்பட்டன.) இத்தகைய சான்றுகளினால் கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலே, பேபரைஸ் தாள்களைவிடத் தோற் புத்தகங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகின்றது.