உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

29

'தமிழ் நாட்டின் தெற்கு வட்டாரங்களில் பாறைகளிலும், குகைகளிலும், எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப் பட்டவை. அந்தக் கல்வெட்டுக்கள், தமிழ் எழுத்தும் தமிழ்மொழியும் உருவடைந்து கொண்டிருந்த காலத்தைத் தெரிவிக்கின்றன. தமிழரின் ட இந்தியக் கலாசாரத் தொடர்பு வளர்ச்சிக் காலத்தை இவை தெரிவிக் கின்றன' என்று திரு.கே.ஏ. நீலகண்ட சாத்திரி எழுதியுள்ளார்.3 (கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எழுத்தும் தமிழகம் வந்துவிட்டது. சாத்திரி கி.மு. முதல் நூற்றாண்டு என்று காலத்தைக் குறைத்துக் கூறுகிறார்.)

தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரையில் பல தவறான கருத்துக்களை வெளியிட்ட திரு. நீலகண்ட சாத்திரி பிராமி எழுத்தைப் பற்றியும் தவறாகக் கூறியுள்ளார்.

திரு. நீலகண்ட சாத்திரியின் இந்தத் தவறான கருத்தை ஐரோப்பியத் தமிழறிஞராகிய டாக்டர் கமல் சுவலபில் அவர்களும் ஆராயாமல் இவரைப் பின்பற்றுவது வியப்பாக இருக்கிறது. இந்த அறிஞர், சாத்திரி கூறிய தவறான கருத்தையே பொன்போலப் போற்றி எழுதியுள்ளார்.

4

அசோகருடைய காலத்தில் அல்லது அவருடைய காலத்துக் குச் சற்றுப் பிறகு தமிழ் எழுத்து தமிழருக்குத் தெரிந்திருந்தது. கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ் மொழிக்குத் தமிழ்-பிராமி எழுத்து அமைத்துக்கொள்ளப்பட்டது. அமைத்துக் கொண்ட நெடுங்காலத் துக்குப் பிறகு அவ்வெழுத்து இலக்கியம் எழுதப் பயன்படுத்தப் பட்டது என்னும் கருத்துப்பட டாக்டர் கமல் சுவலபில் எழுதுகிறார். இந்தத் தவறான கருத்தையே அவர் மீண்டும் இன்னோர் இடத்தில் எழுதுகிறார்: கி.மு. 250ல் அல்லது அதற்குச் சற்றுப்பின்னர் அசோகன் (கி.மு. 272- 232) உடைய தெற்குப் பிராமி எழுத்து தமிழ் ஒலி யமைதிக்குப் பொருந்தத் தமிழில் அமைத்துக் கொள்ளப்பட்டது. கி.மு. 200 - 100 க்கு இடையில் பௌத்த-சைனத் துறவிகள் இருந்த இயற்கைக் குகைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்.5

5

இவை ஆழ்ந்து ஆராயாமல் மேற்போக்காகக் கூறப்படுகிற கருத்துக்கள். தமிழின் பழைமையை யறிந்தவர், பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை, நூல்கள் இல்லை என்று