உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

"

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

கூறமாட்டார். தொடக்கக்காலத்தில் தமிழில் ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கி வந்தது. பிராமி எழுத்து தமிழகத்துக்குப் புதிதாக வந்த பிறகு, அதற்கு முன்பு வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்து மறைந்துபோய், பிராமி எழுத்து நிலைத்து விட்டது. ‘பழையன கழிதலும் புதியனபுகுதலும், வழுவல கால வகையினானே' என்பது எழுத்து மாறுதலுக்கும் பொருந்தும். பழைய எழுத்தை மாற்றிப் புதிய எழுத்தை மேற்கொண்டதைத் துருக்கி நாட்டிலும் காண்கிறோம். துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தில் பழைய துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன. அண்மைக் காலத்தில் துருக்கி நாட்டில் சீர்திருத்தங் களை உண்டாக்கிய துருக்கியின் தந்தை எனப்படும் ஆட்டா டர்க் என்பவர் பழைய அரபி எழுத்தை மாற்றிப் புதிதாக இலத்தீன் எழுத்தை (ஆங்கில எழுத்தை) அமைத்துவிட்டார். இப்போது துருக்கியர் துருக்கி மொழி இலக்கியங் களைப் புதிய இலத்தீன் எழுத்தினால் எழுதி வருகிறார்கள். இப்போது இலத்தீன் எழுத்தினால் எழுதி வருவதனால், இலத்தீன் எழுத்து தான் துருக்கி மொழியின் ஆதி எழுத்து, இலத்தீன் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி இலக்கியம் உண்டாயிற்று என்று கூறுவது பொருந்துமா? அப்படிக் கூறுவது தவறு அல்லவா? இதுபற்றி விரிவாக எழுதுவதற்கு இஃது இடம் அன்று.

பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழர் இலக்கியம் வளர்த்தனர் என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களும், நூல்களும், எழுதப்பட்டிருந்தன. கி.மு. 8ஆம் நூற்றாண்டி லே தொல்காப்பியம் எழுதப்பட்டது. இவற்றையறியாமல் பிராமி எழுத்து வந்த பிறகுதான் தமிழில் இலக்கியம் தோன்றியது என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு பழைய தமிழ் எழுத்து தமிழகத்தில் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வந்த பிறகு பழைய தமிழ் எழுத்து மறைந்துவிட்டது என்பதுதான் தமிழின் பழைமைக்கும் வரலாற்றுக்கும் பொருத்தமானது.

வடக்குப் பிராமியும் தெற்கு பிராமியும்

பிராமி எழுத்து வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், அக்காலத்தில் வழங்கிவந்தது. ஆனால் தென்னிந்திய பிராமிக்கும், வட இந்திய பிராமிக்கும், வரி வடிவில் சிறு வேறுபாடுகள் உண்டு. இந்த