உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

37

அவை கடைச்சங்க காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. அவை பிராகிரு மொழி பயின்ற பௌத்த சமணர்களால் எழுதப் பட்டவையாகையால் இத்தமிழ் மொழித் தொடரின் இடையிடையே பிராகிரு மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. பிராகிருத மொழிச் சொற்கள் கலவாத தமிழ் மொழித் தொடர்களும் இந்தக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

இடர்ப்பாடுகள்

பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படிப்பதில் இடர்ப் பாடுகள் உள்ளன. இவ்வெழுத்துக்கள் கற்பாறைகளில் எழுதப் பட்டுள்ளபடியால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட இந்த எழுத்துக்கள் காலப் பழைமையினாலுந் தட்பவெப்பக் கால நிலைகளினாலும் தேய்ந்தும், மழுங்கியும், உருமாறியும், உள்ளன. கற்பாறைகளில் உள்ள கீறல், பிளவு, வெடிப்பு, புள்ளி புரைசல்கள் முதலானவற்றினால் கல்வெட்டெழுத்துக்களின் சரியான வடிவம் தெரிவதில்லை. சில இடங்களிலே இன்ன எழுத்துதான் என்று அறிய முடியாதபடி சிதைந்துள்ளன. அவற்றின் சரியான வடிவத்தைக் கண்டுபிடித்துப் படிப்பது சங்கடமாக இருக்கிறது.

எழுத்தைப் பொறித்த கற்றச்சர் சில சமயங்களில் இடையே எழுத்துக்களைப் பொறிக்காமல் விட்டுவிடுவதும் உண்டு. இந்தப் பிழை பெரும்பாலும் ஒற்றெழுத்து இரட்டித்து வரும் இடங்களில் காணப் படுகின்றது. பளி, கொடுபிதவன், குறு, குன்றது, தசன், உபு, இயகன் என்று டமறிந்து படிக்க வேண்டும்.

புள்ளி இடப்பட வேண்டிய எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி இல்லாமலே பொறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுகிறோம். பெருங்கடுங்கொன, தமமம, அதிட்டானம், கிரன, ஊர, ஆதன என்று பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றைப் புள்ளியிட்டு முறையே பெருங்கடுங்கோன், தம்மம், அதிட்டானம், கீரன், ஊர், ஆதன் என்று படிக்க வேண்டும்.

இகர ஈற்றுச் சொற்களும் ஐகார ஈற்றுச் சொற்களும் சில இடங்களில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. மனிய், ஆந்தைய், மதிரைய், கனிய், பாளிய், வழுத்திய் என்று எழுதப் பட்டவை முறையே

.