உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

மனி, ஆந்தை, மதிரை, கனி, பாளி, வழுத்தி என்று படிக்கப்பட வேண்டும். சில இடங்களில் இகர ஈற்றுச் சொற்களின் கடைசியில் இகரமும் யகர மெய்யும் சேர்த்து எழுதப்பட்டிருப்பதும் உண்டு. நெல்வெளிஇய், பாளிஇய் என்பனவற்றை நெல்வெளி,பாளி என்று படிக்கவேண்டும். இவ்வாறு எழுதுவது அக்காலத்து முறை.

குறியீடுகள்

பிராமி எழுத்து வாக்கியங்களின் இறுதியில் சில குறிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கொங்கர் புளியங்குளம், அழகர் மலை இவ்விரண்டு இடங்களில் உள்ள பிராமி எழுத்துச் சொற்றொடர் களின் கடைசியில் இக்குறிகள் காணப்படுகின்றன. மற்ற இடங்களில் இக்குறிகள் காணப்படவில்லை. அந்தக் குறிகள் இவை.

இந்தக் குறியீடுகளும் வேறுசில குறியீடுகளும் இலங்கையில் உள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

இந்தக் குறியீடுகள், வாக்கியத்தின் முடிவைக் காட்டுகின்றன என்று அறிஞர் சிலர் கருதுகிறார்கள். கிருட்டிணசாத்திரி, கே.வி.சுப்பிரமணிய அய்யர், ஐ.மகாதேவன், டி.வி.மகாலிங்கம் ஆகியோர் இவ்வாறு கருது கின்றனர். இவர்களுடைய கருத்து தவறானது என்று தோன்றுகிறது. இந்தக் குறிகள் வேறு ஏதோ பொருளைத் தெரிவிக்கின்றன.

“ இந்தக் குறியை சுவஸ்திகம் என்றும் இது மங்கலத்தைக் குறிக்கிறது என்றும் திரு.கிருட்டிண சாத்திரி கருதுகிறார். இவர் கூறுவது தவறு என்று தோன்றுகிறது. சுவஸ்திகத்தின் குறி – இப்படி இருக்கும். நாற் சதுரமாக அமைந்த குறி வேறு எதையோ குறிக்கிறது என்று தோன்றுகிறது.

மேலே காட்டப்பட்ட குறிகள் ஏதோ எண்ணின் அளவை (பொன் அல்லது நாணயத்தின் மதிப்பைத்) தெரிவிக்கின்றன என்று தோன்று கிறது. கொங்கர் புளியங்குளத்துக் கல்வெட்டில்,

‘பாகலூர் போத்தன் பிட்டன் ஈந்தவை பொன்'

‘குட்டு கொடங்கு ஈத்தவன் சிறு ஆதன் பொன்'