உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

57

பேத்தன் பிடான் என்பதும் தவறாக எழுதப்பட்டிருக்கின்றது. போத்தன் பிட்டன் என்று இஃது எழுதப்படவேண்டும். பேத்தன் என்றும் பிடான் என்றும் பெயர் இல்லை. போத்தன், பிட்டன் என்னும் பெயர்கள் சங்ககாலத்தில் வழங்கி வந்தன. நாகன் போத்தனார், மதுரைப் போத்தனார், மதுரை மருதங்கிழார் மகனார் இளம் போத்தனார் என்று போத்தன் என்னும் பெயரைச் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன், பிட்டங்கொற்றன் என்னும் பெயர்களையும் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன் கொற்றனைய பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் உள்ளன. இந்தச் சான்றுகளைக் கொண்டு இந்தப் பிராமிக் கல்வெட்டில் 'பேத்தன் பிடான்' என்றிருப்பது தவறு என்றும் அது போத்தன் பிட்டன் என்றிருக்க வேண்டும் என்பதும் உறுதியாகத் தெரிகின்றது.

9

-

‘ஈத்தவெ’ என்றிருப்பதும் கொச்சைச் சொல். இஃது ஈத்தவை என்று இருக்கவேண்டும். ஈத்தவை என்பது ஈந்தவை என்பதன் வலித்தல் விகாரம். ஈந்தவை ஈத்தவை கொடுத்தவை. பொன் என்பதன் பக்கத்தில் இரண்டு குறியீடுகள் உள்ளன. அவை பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன. அந்த அளவு இன்னதென்பது தெரியவில்லை.

பாகனூரில் இருந்த போத்தன் பிட்டன் என்பவர் இந்தக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகச் செலவிட்ட பொன் இவ்வளவு என்பதை இந்தக் கல்வெட்டு மொழிகள் கூறுகின்றன.

அடிக்குறிப்புகள்

1.

1st Oriental Conference.

2. Third Oriental Conference.

3. Third Oriental Conference.

4.

♡ + Lo co

New Indian Antiquary.

5. p.61. Seminar on Inscriptions 1966.

6. p.228 - 231 Early South Indian Palaeography.

7. வேள்விக்குடிச் செப்பேடு, மூன்றாம் ஏடு, பின் பக்கம் 33-34ம் வரி. 8. வேள்விக்குடிச் செப்பேடு, ஏழாம் ஏடு, பின்புறம் வரி 107-110.

9. புறநா. 120, 168, 169, 172.