உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குன்னக்குடி (குன்றக்குடி) பிராமி எழுத்து

இராமநாதபுர வட்டத்து, திருப்பத்தூர் தாலுக்காவில் குன்னக்குடி (குன்றக்குடி) இருக்கிறது. காரைக்குடியிலிருந்து ஐந்துகல் தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றின் பெயரே இவ்வூரின் பெயராக அமைந்திருக்கின்றது. குன்றின்மேல் முருகப் பெருமா னுக்குக் கோயில் இருக்கின்றது. குன்றின் அடிவாரத்தில் மூன்று குடைவரை (குகைக்)க் கோயில்கள் இருக்கின்றன. மலை மேல் உள்ள முருகன் கோயிலுக்கு மேற்கே இயற்கையாக அமைந்த பொடவு இருக்கிறது. இந்தப் பொடவு இப்போது ஞானியார் மடம் என்று பெயர் கூறப்படுகிறது. இந்தப் பொடவின் மேற்புறப் பாதையின் உட்பக்கத்தில் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய பிராமி எழுத்துக் கல்வெட்டு இருக்கின்றது. 1909ஆம் ஆண்டில் இந்த எழுத்து கண்டுபிடிக்கப் பட்டது. 1910ஆம் ஆண்டு கல்வெட்டுத் துறை அறிக்கையில் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.' இந்த எழுத்து 1909 ஆம் ண்டு கல்வெட்டுத் தொகுப்பின் 44 ஆம் எண்ணாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.2

2

குகை வாயிலின் மேற்புறத்துப் பாறையில், உட்புறமாகப் பொறிக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்கள் ஒரே வரியில் பதினொரு எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது. இந்த எழுத்துக்களைப் பொறித்த கற்றச்சன் தவறு செய்துவிட்டான். வழக்கப்படி

இடப்புறத்திலிருந்து வலப்புறமாக எழுதாமல், வலப் பக்கத்தி லிருந்து இடப் பக்கமாகப் பொறித்திருக்கின்றான். இந்த நிலையில் இவ் வெழுத்துக்களைப் படிப்பது கடினமாக இருக்கின்றது. இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது.

F RS HYT TYY. T

இதை இடப் புறத்திலிருந்து தொடங்கி வலப் புறமாக எழுதினால் இதன் உருவம் இப்படி அமையும்.