உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

24462AHIS93

இதுதான் சரியான வடிவம்.

L E E T H I L dll f

59

திரு. கிருட்டிண சாத்திரியும், திரு. சுப்பிரமணிய அய்யரும் இதைப் படிக்காமல் விட்டனர். திரு. டி.வி.மகாலிங்கம் இதை இவ்வாறு படித்துள்ளார். ‘உர ஊர அதன் சாத்தன்' என்று படித்துள்ளார். உபி ஊர் ஆதன் சாத்தன் என்று அமைத்து விளக்கங் கூறுகிறார். அதன் என்பது ஆதன். ஆதன் என்பதன் பொருள் ஆட்தன், ஆப்தன் என்பதும் அர்ஹத் என்பதும் ஒன்றே. அர்ஹத் என்னுஞ் சொல்லைப் பௌத்தர், சைனர், ஆசீவகர் பயன் படுத்தியுள்ளனர் என்று கூறுகின்றார்.3

இதை இவர் 'உபிஊர் ஆதன் சாச்சன்' என்று படித்தது சரியே. ஆனால் ஆதன் என்பதற்கு இவர் கூறும் விளக்கம் தவறாகவும் குத்திரயுக்தியாகவும் இருக்கின்றது. ஆதன் என்னும் பெயர் சங்க காலத்தில் மக்கள் பெயராக வழங்கி வந்துள்ளது.

6

திரு.ஐ. மகாதேவன் இதைப் படித்ததில் முதல் எழுத்து புரைசல் இடையே சரியாகத் தெரியாமலிருப்பதனால் அந்த எழுத்தை விட்டு விட்டு மற்ற எழுத்துக்களைப் படித்துள்ளார். ‘...பிஊர் ஆதன் சாத்தன்' என்று படிக்கின்றார்.4 இவர்கள் இருவரும் இந்த எழுத்துக்களைச் சரியாகவே படித்திருக்கின்றார்கள்.

முதல் எழுத்தாகிய உ புரைசலும் சேர்த்து இருக்கின்றது. அதை உ என்றே படிக்கலாம். மூன்றாவது எழுத்தை டி.வி. மகாலிங்கம் ஃ இவ்வாறு வரைந்து இஊ என்று படித்துள்ளார். தமிழில் இவ்வாறு எழுதுவது மரபு இல்லை. இதை ஊன்றிப் பார்த்தால் (ஊ) என்று தெரிகின்றது. ஊபி ஊர் என்பது உப்பூர். அதன் என்பது ஆதன் என்பதன் கொச்சை வாசகம். சே என்று தவறாக எழுதப்பட்டிருக் கின்றது. இது சா என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பிராமி எழுத்து சகரத்தின் உச்சியில் இடப் பக்கமாகக் கோடு இட்டால் செ ஆகிறது. அந்தக் கோட்டை வலப்பக்கமாக இட்டால் சா ஆகின்றது. வலப் பக்கமாக இடவேண்டிய கோட்டை இடப்பக்கமாக இட்டிருக்கிற